நிறை புத்தரிசி பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு

By Yashini Aug 11, 2024 11:44 AM GMT
Report

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

நாட்டில் விவசாயம் செழித்து, வறுமை நீங்க இந்த பூஜை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை நாளை நடைபெறுகிறது.  

இதனை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது.

நிறை புத்தரிசி பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு | Sabarimala Ayyapan Temple Opens Today For Pooja

நாளை அதிகாலை 5.45 மணி முதல் 6.30 மணி வரை நிறை புத்தரிசி பூஜை நடைபெறவுள்ளது.

இந்த பூஜைக்காக பாலக்காடு, அச்சன்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து புதிதாக அறுவடை செய்த நெற்கதிர்களை கொண்டு பூஜை செய்யப்படவுள்ளது.

பின்னர் அவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்குப் பின்னர் நாளை இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

மீண்டும் ஆவணி மாத பூஜைகளுக்காக வரும் 16 ஆம் திகதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US