மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

By Yashini Feb 12, 2025 06:45 AM GMT
Report

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு இன்று திறக்கப்படுகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு கால பூஜைகள் முடிந்த நிலையில் கடந்த மாதம் 20ஆம் திகதி காலை கோவில் திரு நடை அடைக்கப்பட்டது.

இந்நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் திரு நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு | Sabarimala Ayyappa Temple Path Opens Today

தந்திரி கண்டர் பிரம்மதத்தர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

இன்று முதல் வருகிற 17ஆம் திகதி வரை 5 நாட்கள் சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்.

இந்த நாட்களில் தினமும் உதயாஸ்தமய பூஜை, படிபூஜை, களபாபிஷேகம் நடக்கிறது.

நாளை காலை 5:30 மணி முதல் 11:30 மணி வரை நெய் அபிஷேகமும், 16ஆம் திகதி மாலை சஹஸ்ர கலச பூஜையும், 17ஆம் திகதி சஹஸ்ர கலசாபிஷேகமும் நடக்கிறது.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.           


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US