சபரிமலை மண்டல பூஜை 2025.., அறிவிக்கப்பட்ட முக்கிய திகதிகள் என்ன?
ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலமாக சபரிமலை விளங்குகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு காலத்தில் மட்டும் நடை திறக்கப்படுகிறது.
அந்தவகையில், இந்த ஆண்டு மண்டல பூஜை 27ஆம் திகதி காலை 10.10 மணிக்கும் 11.30 மணிக்கும் இடையே சுப முகூர்த்தத்தில் நடைபெறும்.
மேலும், அன்றைய தீபாராதனை 11.30 மணிக்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் மண்டல பூஜைக்காக ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம் டிசம்பர் 23 அன்று ஆறன்முள பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்படும்.
26ஆம் திகதி மாலை தீபாராதனைக்கு முன்பு ஊர்வலம் சந்நிதானத்தில் வந்தடையும் எனவும் அதன் பின் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து, அன்று 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

அடுத்த நாள் 27ஆம் திகதி மதியம் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும்.
இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும் எனவும் மகர விளக்கு ஜோதி தரிசனம் மற்றும் திருவிழாவிற்கு டிசம்பர் 30 மாலை நடை திறக்கப்படும்.
மேலும், ஜனவரி 15ஆம் திகதி மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |