கோடி புண்ணியம் அருளும் 18வருடம் சபரிமலை யாத்திரை
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் எங்கிலும் ஐயப்பனுக்கு பக்தர்கள் அதிகம்.ஐயப்ப சுவாமிக்கு கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் ஏராளம்.அப்படியாக சபரிமலைக்கு யாத்திரை சென்று தரிசனம் செய்வதாலும், அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடுவதாலும் ஐயனின் அருள் கிடைத்து நம்முடைய குடும்பம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை.
பொதுவாக நாம் எந்த காரியம் செய்யவேண்டும் என்று நினைத்தாலும் அதற்கு ஒரு நல்ல வழிகாட்டி தேவை.அந்த வகையில் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணியும் பக்தர்களுக்கு வழிகாட்டியாக குருவாக குருசாமி இருந்து வழிநடத்துவார்.
எவர் ஒருவர் தொடர்ந்து 18 வருடம் மாலை அணிந்து ஐயப்பன் கோயிலுக்கு சென்று வருகிறார்களோ அவர்கள் தான் குருசாமி ஆகிறார்.ஐயப்பன் கோயிலுக்கு ஒரு முறை மாலை அணிந்து எந்த ஒரு தடங்கல் இல்லாமலும் மலைக்கு சென்று ஐயன் ஆறுல் பெருவது சாதாரண விஷயம் இல்லையோ அதே போல் 18 வருடம் ஒருவர் ஐயனுக்காக விரதம் இருந்து மாலை அணிந்து செல்வதும் சாதாரண விஷயம் இல்லை.
அவ்வாறு நடப்பதற்கே நாம் கொடுத்து வைக்கவேண்டும். மேலும் ஒரே வருடத்தில் 18 முறை ஐயப்பன் கோயிலுக்கு சென்று வந்தவர்கள் குருசாமி ஆகிவிட முடியாது.18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு இருமுடி கட்டு கட்டி, 48 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சென்று வருபவர்களே குருசாமி என்ற நிலையை அடைய முடியும்.
இதில் இன்னொரு சுவாரசிய விஷயம் என்னவென்றால் 18 வது வருடம் ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பொழுது அவர்கள் கையில் தென்னங்கன்று ஒன்றை எடுத்து செல்வார்கள்.அவ்வாறு அவர்கள் எடுத்து செல்லும் பொழுது பிற பக்தர்கள் அவர்கள் குருசாமி என்று கண்டுகொண்டு அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவார்கள்.
இத்தனை விசேஷங்கள் கொண்டதால் தான் 18-ம் வருடம் சபரிமலை யாத்திரையை புனித யாத்திரை என்று அழைக்கின்றனர். இந்த குருசாமி, அடுத்த முறை கார்த்திகை மாதத்தில் மாலை அணியும் ஐயப்ப பக்தர்களுக்கு, தன் கையால் மாலை அணிவிக்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |