2026 டிசம்பர் மாதம்: குரு பகவானின் அருளால் முன்னேற்றம் பெறப்போகும் தனுசு ராசியினர்..
2026 டிசம்பர் மாதம் குரு பகவானின் ஆதிக்கத்தை கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகிறது என்று பிரபல ஜோதிடர் ராம்ஜி சுவாமிகள் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அதைப்பற்றி பார்ப்போம்.
இவர்களுக்கு 9ஆம் இடத்தில் இருக்க கூடிய குருவினுடைய சஞ்சாரத்தால் இந்த மாதம் இவர்களுக்கு அதிர்ஷ்டமான மற்றும் மிக அற்புதமான மாதமாக அமையப்போகிறது. இருப்பினும் இவர்களுக்கு ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைவதால் தேவையில்லாத மன அழுத்தம், கோபம் மற்றும் விவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
பொறுமையை கடைப்பிடிப்பது தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கும். இவர்களுக்கு இரண்டாம் இடத்தில் இருக்கக்கூடிய ராகுவின் அருளால் பணவரவு மிகச் சிறப்பாக இருக்கும். பங்கு சந்தை மற்றும் மருத்துவ துறை சார்ந்தவர்களுக்கு இந்த காலகட்டம் பொற்காலமாகவே அமையப் போகிறது.
இருந்தாலும் நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சனைகள் அதாவது ஆஸ்துமா, மூச்சு திணறல் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது அவசியம். இந்த காலகட்டங்களில் இவர்கள் திருப்பதி வெங்கடாசலபதி மற்றும் மகாலட்சுமியை வழிபாடு செய்வது சிறந்த பலன்களை பெற்றுக் கொடுக்கும்.
உடல் நலனில் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வருகின்ற பொழுது தன்வந்திரி ஹோமம் செய்வது சிறப்பு என்று பல்வேறு முக்கியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். மேலும், தகவல்களுக்கு இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.