சாய்பாபா நமக்கு சொல்லும் ஏழு பொன் மொழிகள்
சாய்பாபாவை வணங்காதவர்கள் பிடிக்காதவர்கள் என்று யாரும் இல்லை.சாய் பாபா பக்தர்கள் உலகம் எங்கும் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.அப்படியாக சாய் பாபா நமக்கு சில பொன் மொழிகள் சொல்கிறார் அதை பற்றி பார்ப்போம்.
1.சீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ அவனுடைய துன்பங்கள் முடிவடைந்து சௌகரியத்தை அடைகிறான்.
2.இவ்வுலகை விட்ட பிறகும் நான் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
3.என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களையும் புத்திமதிகளையும் கொடுக்கும்.
4.என்னுடைய மசூதியில் இருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.
5.என்னிடம் வருபவர்களுக்கு என்னை தஞ்சமாக அடைபவர்களுக்கும் என் உபதேசத்திற்காகவும் என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் அவைகளை அளித்துக் கொண்டே இருப்பேன்.
6.நீ என்னிடத்தில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.
7.என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பது இருக்காது என் அருள் எப்பொழுதும் அவர்களுக்கும் இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்