எதிரிகளை நம் வசமாக்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு

Parigarangal
By Sakthi Raj Apr 22, 2024 01:27 PM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

பகவான் மகாவிஷ்ணுவின் திருக்கரத்தை அலங்கரிக்கும் ஆயுதம் சுதர்சன சக்கரம் என்பதை அறிவோம். பெருமாள் நினைப்பதை அறிந்து பகைவர்களை அழிக்கப் புறப்படும் சிறப்பு மிக்க சுதர்சன சக்கரமே சக்கரத்தாழ்வாராக பக்தர்களால் வணங்கப்படுகிறார்.

சுதர்சனன் என்றால் மங்கலகரமானவன் என்று பொருள். மற்ற ஆயுதங்களைப் போல் இல்லாமல் சுதர்சன சக்கரம் எப்போதும் சுழன்றபடியே இருக்கும் வலிமையான ஆயுதம். ‘சக்ரா’ என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருந்துகொண்டே இருப்பது ஆகும்.

எதிரிகளை நம் வசமாக்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு | Sakarathalavar Temple Vishnu Perumal Chakkaram

பகவானின் உத்தரவுப்படி பிரபஞ்ச வெளியின் அழுத்தங்கள் அற்ற பாதையில் செல்லும் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் செல்ல முடியும் என்கிறது விஷ்ணு புராணம்.

கணப்பொழுதில் எதிரியின் மீதான தாக்குதலை அரங்கேற்றி அழித்துவிடும்.

எதிர்பாராமல் எதிரியின் வலிமையில் சுதர்சன சக்கரத்தின் வேகத்தில் தடை ஏற்படும் நிலை வந்தால் சக்கரத்தின் வேகமும் வலிமையும் மேலும் கூடுவதை ‘ரன்ஸகதி’ என்கிறது புராணம்.

எதிரிகளை நம் வசமாக்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு | Sakarathalavar Temple Vishnu Perumal Chakkaram

எதிரிகளை அழித்த பின் சுதர்சன சக்கரம் மீண்டும் பகவானின் திருக்கரத்தை வந்தடைகிறது.

மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதற்கும் பிரார்த்திப்பதற்கும் சமமாக சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் சிறப்பு மிக்கது. முக்கியமாக, பகைவர்களால் ஏவப்படும் பில்லி, சூனியம் போன்ற பிரச்னைகள் தீர சக்கரத்தாழ்வாரை வணங்குதல் நன்மை தரும்.

சக்கரத்தாழ்வார் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வைத்து சிவப்பு மலர்களால் மாலை சூட்டி மனம் உருக, ‘ஓம் நமோ பகவதே மஹா சுதர்சனாய நம’ என்ற மந்திரத்தைச் சொல்லி பிரார்த்தித்தால் அனைத்து கிரக தோஷங்களும் விரைவில் நீங்கிவிடும்.

எதிரிகளை நம் வசமாக்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு | Sakarathalavar Temple Vishnu Perumal Chakkaram

மாத ஏகாதசி, பிரதி புதன்கிழமை, திருவோணம், சனிக்கிழமை உள்ளிட்ட அவருக்கு உகந்த நாட்களில், துளசி சாத்தி வேண்டிக்கொண்டால், இன்னல்கள் யாவும் நீங்கி இல்லத்தில் நிம்மதி குடிகொள்ளும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை அணிவித்து அர்ச்சனை செய்து 12, 24, 48 என்ற இரட்டைப்படை எண்ணிக்கையில் வலம் வந்து வழிபட்டால் மனதில் எண்ணிய வேண்டுதல்கள் தடையில்லாமல் நிறைவேறும்.

சக்கரத்தாழ்வாரை வணங்கிட நினைத்த காரியம் வெற்றி, மன அமைதி, செய்யும் தொழிலில் சிறப்பு, துணிவு போன்றவை நிச்சயம் வாய்க்கும்.

துன்பத்திலிருந்து உடனடியாக நிவாரணம் பெற சக்கரத்தாழ்வாரோடு, நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது சிறப்பு.

எதிரிகளை நம் வசமாக்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு | Sakarathalavar Temple Vishnu Perumal Chakkaram

இதன் அடிப்படையில்தான் விஷ்ணு கோயில் சன்னிதிகளில் சக்கரத்தாழ்வார் மற்றும் நரசிம்மர் சிலைகளை முன்னும் பின்னுமாக பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர்.

பில்லி, சூனியம், ஏவல், சித்த பிரமை, புத்தி சுவாதீனம் போன்ற பிரச்னைகளுக்கு மதுரை, திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோயிலில் வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வாரை வணங்கினால் அனைத்துப் பிரச்னைகளும் துன்பங்களும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

ராமாயணம் நமக்கு உணர்த்துவது யாவை

ராமாயணம் நமக்கு உணர்த்துவது யாவை


‘நாளை என்பது நரசிம்மனுக்கு கிடையாது’ என்று சொல்வார்கள். அபயம் என்று அவரிடம் போய் நின்றால் அடுத்த கணமே நம்மைக் காத்தருள்வார் நரசிம்மர்.

அதேபோல், திருமாலின் பக்தர்களுக்கு ஒரு துன்பம் என்றால் அது தனது எஜமானனான பெருமாளுக்கே ஏற்பட்ட இடையூறாகக் கருதி விரைந்து வந்து காப்பவர் சக்கரத்தாழ்வார். எனவே, சக்கரத்தாழ்வாரை வணங்கி நம் வாழ்வில் பகைவர்கள் பயமற்று இருப்போம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்



+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US