மூலிகை சாம்பிராணியை வீட்டில் செய்வது எப்படி?
பொதுவாக சாம்பிராணி தூபம் போட்டால் வீட்டில் உள்ள தீய சக்திகள் நீங்கும் என்பார்கள்.அப்படியாக மக்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக பல வழிகளை சொல்லிய சித்தர்கள் வழியில் சாம்பிராணி வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம்.
சித்தர்கள் சொல்லிய இந்த சாம்பிராணி தூபம் வீட்டில போட,வீட்டில உள்ள எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் நீங்கி நேர்மறை எண்ணங்கள் வளரும்.
இப்பொழுது 7 மூலிகை பொருள் கொண்டு வீட்டில் சாம்பிராணி எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த தூபத்தில் பயன்படுத்தக்கூடிய 7 பொருட்கள், வெண்கடுகு, நாய்கடுகு, மருதாணி விதை, அருகம்புல் பொடி, வில்வப்பொடி, வேம்பு பொடி, குங்கிலியம் ஆகும். வெண்கடுகும், நாய்கடுகும் பைரவருக்கு உகந்ததாகும்.
மருதாணி விதை திருமகளுக்கு உரியதாகும். அருகம்புல் விநாயகருக்கு உகந்ததாகும். வில்வமும், வேம்பு பொடியும் சிவன் மற்றும் சக்திக்கு உரியதாகும்.
இப்போது இந்தப் பொருட்களையெல்லாம் அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதை வாரத்திற்கு மூன்று நாட்கள் காலை, மாலை வீட்டில் போடுவது மிகவும் நல்லதாகும்.
இந்த இயர்கையான மூலிகை வகை சாம்பிராணியை கடை மற்றும் தொழில் நிலையங்களில் பயன்படுத்தும்போது வியாபாரம் பெருகும்.
எதிரிகள் தொல்லை நீங்கும். வீட்டில் பயன்படுத்தும்போது கண் த்ரிஷ்டி குடும்பத்தில் வீண் சண்டை, தூக்கமின்மை, நிம்மதியின்மை, நோய் தொல்லை போன்றவை அனைத்துமே விலகி விடும். விஷ ஜந்துக்கள், விஷக்கிருமிகள் வீட்டில் தங்காது. மேலும்,பைரவர், சக்தி, சிவனுக்கு உகந்தது இந்த மூலிகை சாம்பிராணி.
எனவே, வீட்டில் தொடர்ந்து போட்டு வருவது நல்ல பலனைத் தரும். பழந்தமிழர்கள் மூலிகை தூபம் போடுவதை ஒரு பழக்கமாவே வைத்திருந்தனர். தற்போது இதுபோன்ற பழக்கத்தை மக்கள் செய்வது கிடையாது.
எனவே, இதை தினமும் வீட்டில் போடுவது நிறைய நன்மைகளை நமக்கு ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் தரும் என்பதை நினைவில் கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |