வீட்டில் சாம்பிராணி போடுவதால் ஏற்படும் நன்மைகள்
முன்பெல்லாம் வெள்ளி செய்வாய் கிழமைகளில் அனைவரது வீட்டிலும் சாம்பிராணி புகை போடுவது என்பது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால்,இன்றைய காலத்தில் சிலர் சாம்பிராணி போடுவது என்றால் என்னவென்று?கேட்கும் நிலையில் அதன் அருமை தெரியாமல் இருக்கிறார்கள்.
நாம் இப்பொழுது சாம்பிராணி தூபம் போடுவதால் நம் வீட்டில் நடக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
நம் சாம்பிராணி புகை வீட்டில் போடுவதால் ஒரு ஹோமம் செய்த பலன் கிடைக்கிறது என்கிறார்கள். சாம்பிராணி கட்டிகளை தீயில் இட்டவுடன் அது புகை ஆகி போகிறது.அதை போல் நம் வீட்டில் உள்ள கஷ்டங்கள் துன்பங்கள் சாம்பிராணி போல் நெருப்பில் பட்டு புகையாகி போகும் என்கின்றனர்.
அதனால் தான் நம் முன்னோர்கள் சாம்பிராணி புகையை இல்லங்களிலும் தொழில் செய்யும் இடங்களிலும் சாம்பிராணி போடுவதை வழக்கமாக கொண்டுயிருந்தனர்.
சாம்பிராணியை நன்கு புகைக்கவிட்டு நம் வீட்டில் உள்ள மூலை முடுக்குகளில் காண்பிக்க வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் விலகும் என்று நம்பப்படுகிறது.
மேலும்,சாம்பிராணியில் காய்ந்த வேப்ப இலை கொண்டு தூபம் போடும் பொழுது வீட்டில் உள்ள நோய் நொடிகள் விலகும்.அது மட்டும் அல்லாமல் கொசு தொல்லைகளும் குறையும். சாம்பிராணியில் வெண்கடுகு போட்டு வெடிக்க விட்டால் வீட்டில் உள்ள துர்ஷ்டசக்திகள் விலகும்.
சாம்பிராணியில் காய்ந்த அருகம்புல் வெட்டிவேர் ஆகியவற்றை கொண்டு தூபம் போட வீட்டில் உள்ள தோஷங்கள் யாவும் விலகும்.
சாம்பிராணில் காய்ந்த துளசி போட்டு தூபம் இடும் பொழுது தடைகள் யாவும் விலகி வெற்றிகள் வந்தடையும்.
சாம்பிராணியில் நன்னாரி வேர்,நாய் கடுகு,கரிசலாங்கண்ணிபோன்ற பொருட்களை கொண்டு தூபம் இடும் பொழுது நமக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள் கூட துரோகம் செய்யாமல் தடுக்கும்.
ஒருவரது வீட்டில் சாம்பிராணி புகை போடும் பொழுது லட்சுமி கடாக்ஷம் நிறைகிறது. ஆதலால் வீட்டில் வாரம் இருமுறை சாம்பிராணி புகை போட்டு வர வீட்டில் பல நன்மைகள் நடக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |