30 ஆண்டுகளுக்கு பிறகு மீனத்தில் சனி-எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

Report

நவகிரங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவரும்,மக்களை பயத்தில் வைத்திருப்பவரும் சனி பகவான்.சனி பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றம் எல்லா ராசிகளுக்கும் ஒருவித தாக்கத்தை உருவாக்கும்.மேலும் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு அவரின் சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.

இந்த 2025 ஆம் ஆண்டு சனி பகவான் அவரின் இடத்தை மாற்றுகிறார்.அதாவது வருகின்ற மார்ச் 29 சனிபகவான்,மீன ராசிக்கு செல்கிறார்.மீன ராசி குரு பகவானின் சொந்த ராசி ஆகும்.30 ஆண்டுகளுக்கு பிறகு மீனத்தில் சனிபகவான் செல்வதால் சில ராசிகளுக்கு அது அற்புதமான தாக்கத்தை உருவாக்கும்.அவை என்ன ராசிகள் என்று பார்ப்போம்.

2025 புது வருடம் முதல் சனிக்கிழமையில் செய்ய வேண்டிய அற்புத பரிகாரம்

2025 புது வருடம் முதல் சனிக்கிழமையில் செய்ய வேண்டிய அற்புத பரிகாரம்

கன்னி:

2025 ஆம் ஆண்டு சனி பகவானின் இந்த இடம் மாற்றம் இவர்களுக்கு முதலில் மன அமைதி கொடுக்க போகிறது.சொத்து சம்பந்தமான சங்கடங்கள் விலகும்.வீடு வாகனம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பொன்னான காலம்.

திருமண பந்தத்தில் இருந்த கவலைகள் முழுவதுமாக விலகும்.விவாகரத்து பெறவேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்.திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம்,குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மிதுனம்:

2025 ஆம் ஆண்டு சனி பகவானின் இந்த இடம் மாற்றம் வேலை செய்யும் இடத்தில் நற்பெயரை வாங்கி கொடுக்க போகிறது.அரசு பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.

வியாபாரத்தில் உங்களுக்கான லாபம் உண்டாகும்.குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.குழந்தைகள் உங்களுக்கு பெருமை சேர்த்து கொடுப்பார்கள்.தடை பட்ட காரியங்கள் மீண்டும் துவங்கும்.சொந்தங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மேஷம்:

2025 அம ஆண்டு நிகழக்கூடிய சனிபகவானின் இந்த இடமாற்றம் உங்களுக்கு நினைத்ததை எல்லாம் சாதிக்கும் மனதைரியத்தை கொடுக்க போகிறது.வாழ்க்கையில் உங்களுக்கு அனைத்து சந்தோஷமும் உருவாகும்.

உடலும்,மனமும் சுறுசுறுப்பாக இருக்கும்.உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும்.வியாபாரத்தில் அதிக லாபத்தால் சந்தோசம் அடைவீர்கள்.வெளிநாடு வெளியூர் பயணம் மனஅமைதி கொடுக்கும்.ஆனால் ஆரோக்கிய சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US