சனி பகவானால் வாழ்க்கையில் மிக பெரிய அளவில் சாதித்தவர்கள் யார் தெரியுமா?
நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் நீதிமானாக இருக்கக்கூடியவர் சனி பகவான். அப்படியாக, சனி பகவானை போல் கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை. அந்த வகையில் சனிதிசை, ஏழரை சனி காலம் என்றாலே மக்கள் மத்தியில் பெரும் அச்சம் இருந்து வருகிறது.
அந்த வகையில் சனி பகவனால் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் சாதித்தவர்கள் யார் என்று பார்ப்போம். பொதுவாக மக்கள் ஏழரை அஷ்டமசனி, அர்தாட்டம சனி, நடப்பு சனி தசை காலங்கள் போன்ற காலங்களில் மிகுந்த குழப்பத்துடனும் பயத்துடனும் காணப்படுவார்கள்.
ஆனால், ஒருவர் ஜாதகத்தில் தசா நாதன் வலிமையாக இருந்தால் பயப்பட தேவை இல்லை. மேலும், இவ்வாறான காலங்களில் துன்பம் மட்டுமே வருவதில்லை இந்த காலகட்டத்தில் பெயரும் புகழும் பதவியும் கூட ஒருவரை தேடி வரும் என்பதற்கான சான்றுகள் பற்றிப் பார்ப்போம்.
நம்முடைய இந்தியா சுதந்திரம் பெற்ற போது மகாத்மா காந்தி அவர்களுக்கும் முதல் பிரதமராக பொறுப்பேற்ற திரு ஜவகர்லால் நேரு அவர்களுக்கும் ஏழரை சனி காலம் நடந்து கொண்டு இருந்தது.
அடுத்ததாக, அப்துல் கலாம் ஐயா அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்ற போது அவருக்கு அஷ்டமசனி நடந்து கொண்டு இருந்தது.
ஏன் கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல் முறையாக முதல்வர் பதவி ஏற்றபோது அவருக்கு சனி தசை மற்றும் ஏழரை சனி நடந்து கொண்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவே தொழில் துறையை எடுத்துக்கொண்டால் திருபாய் அம்பானி அவர்கள் ரிலையன்ஸ் நிறுவனம் ஆரம்பம் செய்தபோது அவருக்கு ராகு தசை ஏழரை சனி நடப்பில் இருந்தது.
விளையாட்டு துறையை எடுத்துக்கொண்டால் இந்தியா முதல் முறையாக 1983 ம் ஆண்டு கிரிக்கெட் உலககோப்பையை வென்ற போது கேப்டன் கபில்தேவ் அவர்களுக்கு ஏழரை சனி நடப்பில் இருந்தது.
மக்கள் மனதை கவர்ந்த மகேந்திர சிங் தோனி அவர்கள் 20 ஓவர்கிரிக்கெட் உலககோப்பை, மற்றும் 50 ஓவர் உலககோப்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் கோப்பை சாம்பியன்ஸ் லீக் கோப்பை ஆகியவை வென்ற போது அவருக்கு ராகு தசையில் ஏழரை சனி நடந்து கொண்டு இருந்தது.
ஆக, இவ்வாறு சாதித்தவர்கள் பட்டியல் ஏராளம். அதனால், பொதுவாக நாம் சில விஷயங்களை எடுத்துக்கொண்டு பயம் கொள்ளத்தேவை இல்லை. உண்மையில் சனி பகவான் போல் பாடம் கற்றுக்கொடுப்பவர் யாவரும் இல்லை.
தவறு செய்யாத வரை நாம் அவரை பார்த்து பயம் கொள்ளத்தேவை இல்லை. தர்மத்தை கடைப்பிடித்து நடப்பவருக்கு சனிபகவான் துன்பத்தை கூட நல்வழி படுத்தவே கொடுப்பார்.
மேலும், சனி பகவான் ஜாதகத்தில் அமர்ந்து இருக்கும் இடத்தை பொறுத்தே அவர் அந்த ஜாதகருக்கு நன்மை செய்வாரா? தீமை செய்வாரா என்று தீர்மானிக்க முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |