சனி தோஷம் நீக்கும் சக்தி வாய்ந்த மந்திரம்

By Sakthi Raj Jun 13, 2024 08:00 AM GMT
Report

சனிபகவான் என்றாலே பயம் தான். எப்படி வணங்கினாலும் சனி பகவான் அவருடைய வேலையை சரியாக செய்து முடிப்பார்.

அப்படியாக இழப்புகள் கொடுத்து பாடம் கற்பித்து கொடுக்கும் சனி பகவான் நினைத்து தசரர் இயற்றிய இந்த மந்திரம் சொன்னால் சனியின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை   

சனி தோஷம் நீக்கும் சக்தி வாய்ந்த மந்திரம் | Sani Bagavan Thasarar Iyatriya Solgam Manthiram

பன்னிரு ராசி கட்கும்
பாரினில் நன்மை கிட்ட,
எண்ணிய எண்ணம் எல்லாம்.
ஈடேறிய வழிகள் காட்ட
எண்ணெயில் குளிக்கும் நல்ல
ஈசனே உனைத்துதித்தேன்! பு
ண்ணியம் எனக்கு தந்தே
புகழ்கூட்ட வேண்டும் நீயே!
கருப்பினில் ஆடை ஏற்றாய்!
காகத்தில் ஏறி நின்றாய்!
இரும்பினை உலோகமாக்கி
எள்தனில்பிரியம் வைத்தாய்!
அரும்பினில் நீல வண்ணம்
அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்!
பெரும் பொருள் வழங்கும்
ஈசா பேரருள் தருக நீயே
சனியெனும் கிழமை கொண்டாய்!
சங்கடம் விலக வைப்பாய்!
அணிதிகழ் அனுஷம், பூசம்.
ஆன்றதோர் உத்ரட்டாதி.
இனிதே உன் விண்மீனாகும்!
எழில்நீலா மனைவி யாவாள்!
பணியாக உனக்கு ஆண்டு
பத்தொன்போதென்று சொல்வார்
குளிகனை மகனாய் பெற்றார் !
குறைகளை அகல வைப்பாய்!
எழிலான சூரியன் உன்
இணையற்ற தந்தை யாவார்!
விழிபார்த்து பிடித்து கொள்வாய்!
விநாயகர், அனுமன் தன்னை
தொழுதாலோ விலகிச் செல்வாய்!
துணையாகி அருளைத்தாராய்!
அன்னதானத்தில் மீது அளவிலா
பிரியம் வைத்த மன்னனே !

தினம் ஒரு திருவாசகம்

தினம் ஒரு திருவாசகம்


சனியே! உன்னை மனதார போற்றுகின்றோம்!
உன்னையே சரணடைந்தோம்!
உயர்வெலாம் எமக்குத்தந்தே.
மன்னர் போல் வாழ்வதற்கே
மணியான வழிவகுப்பாய்!
மந்தனாம் காரி. நீலா
மணியான மகர வாசா !
தந்ததோர் கவசம்கேட்டே
சனியென்னும் எங்கள் ஈசா !
வந்திடும் துயரம் நீக்கு!
வாழ்வினை வசந்தம் ஆக்கு!
எந்த நாள் வந்த போதும்
இனிய நாள் ஆக மாற்று!

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US