சனி பகவான் வழிபாடு: மறந்தும் கூட இந்த தவறுகளை செய்திட வேண்டாம்
மிகவும் வலிமை வாய்ந்த கிரகமான சனி பகவான் நாம் செய்யும் நன்மை, தீமைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்க கூடியவர்.
சனி பகவானை வணங்கும் போது மறந்தும் கூட சில தவறுகளை செய்திட கூடாது.
அது என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சனியை போல் கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை என சொல்லக்கேள்விப்பட்டிருப்போம், நீதி மற்றும் கர்மாவிற்குரிய கடவுளாக சனி பகவான் பார்க்கப்படுகிறார்.
பகவானை வணங்குவதற்கு ஏற்ற நாள் சனிக்கிழமை, அதிலும் திரியோதசி நாள் என்பதால் விசேஷமான ஒன்று.
சனி பகவானை வழிபடும் போது
சனி பகவானை வழிபடும் போது ஒரே இடத்தில் அதிகநேரம் நின்று வழிபடக்கூடாது, மெதுவாக நகர்ந்து கொண்டு செல்ல வேண்டும், வழிபட்டு விட்டு வரும் போது முதுகை காட்டிக் கொண்டு திரும்பி வரக்கூடாது, சில அடிகள் பின்னால் நடந்து வந்து திரும்பி வர வேண்டும்.
எண்ணெய் வாங்கி கொடுக்கும் போது இரும்பு பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும், செம்பு, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் கொடுக்ககூடாது, ஏனெனில் செம்பு உலோகம் சூரிய பகவானுக்கு உரியதாகும்.
சனி பகவானை விழுந்து கும்பிட்டு வணங்க கூடாது, பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும், அதாவது சனிபகவானின் பார்வை நம்மீது நேரடியாக விழக்கூடாது, இது கஷ்டங்களை கொண்டு வந்து சேர்க்கும்.
சிவப்பு நிற ஆடைகள் சனி பகவானுக்கு பிடிக்காது என்பதால் அதை அணிந்து செல்லக்கூடாது, கருப்பு அல்லது நீல நிற ஆடைகள் அணியலாம்.
சனி பகவானை வணங்கும் போது மேற்கு திசை நோக்கி நின்று வழிபட வேண்டும்.