ஜாதகத்தில் சனிபகவான் இந்த இடத்தில் இருந்தால் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பார்
ஜோதிடத்தில் சனிபகவான் கர்ம காரகனாக இருக்கிறார். உண்மையில் சனி பகவான் தான் 9 கிரகங்களிலும் ஒரு மனிதனுக்கு ஆசிரியராக இருந்து வாழ்க்கைக்கு எது சரி தவறு என்று சரியாகப் பிரித்து அவர்கள் வாழ்வதற்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய ஒரு கிரகம் ஆவார். இருப்பினும் சனி பகவான் என்றாலே எல்லோருக்கும் ஒரு சரியான புரிதல் இல்லாத ஒரு பயம் மட்டுமே இருக்கிறது.
உண்மையில் சனி பகவான் ஒரு மனிதனுக்கு பல வாய்ப்புகளை வழங்கிய பின்னரே அவருடைய காலம் வரும் பொழுது அவர்களுக்கு எவ்வாறு பாடம் கற்பித்தால் இந்த முறையாவது தங்களை திருத்திக் கொள்வார்கள் என்பதற்காக சில கடினமான செயல்களில் ஈடுபட்டு விடுகிறார்.
உண்மையில் சனி பகவான் எவ்வளவு மெதுவாக நகரக் கூடியவரோ அதேபோல் மெதுவாக காத்திருந்து பல வாய்ப்புகளை கொடுத்து இறுதியில் தான் நமக்கு பாடத்தை கற்பித்துக் கொடுக்கிறார். அதனால் தான் சனி பகவானுக்கு "சனி கொடுக்க எவர் தடுப்பார்" என்கின்ற சொல் இருக்கிறது.

அதோடு சனி பகவான் மிகவும் பொறுமைசாலி. இவர் ஒரு மனிதனை பொறுமையாக செதுக்கி அவரை ஒரு மிக உயர்ந்த நிலைக்கு கூட்டிச் செல்லக் கூடியவர். ஒரு மிகச்சிறந்த ஆயுளும் ஒரு மனிதனுக்கு சனி பகவானால் மட்டுமே கொடுக்க முடியும்.
அந்த வகையில் சனிபகவான் ஒரு மனிதனுக்கு கெடுதல் மட்டுமே தான் செய்வார் என்கின்ற ஒரு கணிப்பு தவறானது. சனி பகவான் ஒருவர் ஜாதகத்தில் 3, 6, 7, 10, 11 ஆகிய இடங்களில் இருக்கும் பொழுது மிகவும் சுபத்துவமாக செயற்படுவார்.

அதிலும் சனி பகவானுக்கு வீடு கொடுத்தவர்கள் உச்சம் மற்றும் ஆட்சி பெற்று இருந்தால் அவர்கள் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வார்கள். உதாரணமாக சிம்ம லக்னத்திற்கு சனி பகவான் 3ல் அமர்ந்து அந்த இடத்தினுடைய அதிபதி அவரை பார்க்கிறார் என்றால் அங்கு அவர் மிகவும் சிறப்பாக செயல்படுவார்.
அதைப்போல், சனி பகவானுடைய தசா புத்தி காலம் 19 வருடம் அந்தர காலங்களில் ஒருவருடைய ஜாதக அமைப்பு சிறப்பாக இருந்து விட்டால் அந்த நபரை மிகப் பெரிய உயர்ந்த நிலைக்கு கூட்டி சென்று விடுவார். இருப்பினும் ஒரு ஜாதகத்தில் சனியும் சூரியனும் மற்றும் சேர்க்கை பெற்றிருக்கக் கூடாது. இவை அந்த நபருக்கு ஒரு மோசமான பலன்களை கொடுத்து விடுவார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |