சனி ஜெயந்தி 2025: சனி பகவானின் அருளை பெற இதை செய்யுங்கள்
சனி பகவான் தர்மத்தின் தலைவன் என்றே சொல்லலாம். அப்படியாக சனி பகவான் பிறந்த தினத்தை தான் சனி ஜெயந்தி என்று கொண்டாடுவோம். இந்த நாளில் நாம் அவரை மனதார வழிபாடு செய்ய நமக்கு சனி பகவான் நமக்கு எண்ணற்ற பலன்கள் வழங்குவார் என்பது நம்பிக்கை.
அப்படியாக, 2025 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சி எப்பொழுது? அன்று செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம்.
சனி பெயர்ச்சி காலங்களில் பலரும் அவர்களின் ஜாதகத்திற்கு ஏற்ப சில கஷ்டங்களை சந்திக்கக்கூடும். அதிலும் குறிப்பாக சனி திசை அல்லது ஏழரை சனி நடப்பவர்கள், கட்டாயம் சனி பகவானை வழிபாடு செய்வதால் அவர்களுக்கு சனி பகவானின் தாக்கம் குறைகிறது.
மேலும், யாராக இருப்பினும் சனி ஜெயந்தி அன்று சனி பகவானை வழிபாடு செய்வது அவசியம் என்கிறார்கள். இந்த வருடம் சனி ஜெயந்தி மே 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் இது ஜேஷ்ட மாத அமாவாசையிலும், தென்னிந்தியாவில் வைகாசி மாத அமாவாசையிலும் கொண்டாடப்படுகிறது.
அன்றைய நாள் நாம் சனி பகவான் ஆலயம் சென்று சனி பகவானை வழிபாடு செய்வது நமக்கு வாழ்வில் நல்ல மாற்றத்தை கொடுக்கும். மேலும், சனி ஜெயந்தி அன்று சனி பகவானுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்வது நல்லது.
மேலும், அன்றைய தினம் கருப்பு எள், கருப்பு துணி, கருப்பு தானியங்கள் அல்லது எண்ணெய் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யலாம். இதன் மூலம் சனி பகவான் மனம் மகிழ்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அதோடு, சனி ஸ்தோத்திரம், சனி சாலிசா அல்லது ஹனுமான் சாலிசா போன்றவற்றை படிக்கலாம். இன்னும் மிக முக்கியமாக அரச மரத்தின் அடியில் விளக்கு ஏற்றினால் சனி பகவானின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சிலருக்கு அன்றைய தினம் கோயில் சென்று வழிபாடு செய்யமுடியாமல் போகலாம். அவர்கள் வீட்டில் இருந்தபடியே சனி பகவானை வழிபடலாம். சனி பகவானின் முழு அருளை பெற வேண்டும் என்றால் ஏழைகளுக்கு உதவி செய்வது மட்டுமே ஒரே வழி.
காரணம், நாம் செய்யும் செயல்களுக்கு எதிர் பலன் கொடுக்க கூடியவர் சனி பகவான். ஆதலால் நல்லதை செய்து நாம் சனி பகவானின் துன்ப பிடியில் இருந்து விலகி நிற்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |