திடீர் குழப்பம்; இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி நடக்குமா? நடக்காதா? விவரம் இதோ..
சனிப்பெயர்ச்சி இந்த ஆண்டு நடக்குமா? நடக்காதா? என்பது குறித்து பார்ப்போம்.
சனிப்பெயர்ச்சி
சில ஜோதிடர்கள் இந்த ஆண்டுதான் சனிப்பெயர்ச்சி என்கின்றனர். சிலர் இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியே கிடையாது. அடுத்த ஆண்டுதான் என்கின்றனர். இதனால் குழப்பமும், விவாதங்களும் எழுந்துள்ளன.
வாக்கியப் பஞ்சாங்கப்படி 2026 மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஆனால், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கம் என்பது தனிப்பட்ட மனிதர்களுக்காகப் பார்க்கப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். இதன் அடிப்படையில், , மீனம் ராசிக்கு ஐந்து ஆண்டுகளும், கும்பம் ராசிக்காரர்களுக்கு இரண்டரை வருடமும் ஏழரை சனி நடைபெறுகிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது.
மகர ராசிக்காரர்கள் ஏழரை சனியால் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வந்தனர். இந்த சனிப்பெயர்ச்சியில் ஏழரை சனியில் பிடியில் இருந்து விடுபடுகின்றனர்.
சனி பகவான் உச்சமாகக் கூடிய இடம் துலாம் ராசி. கெடு பலன்களை அதிக அளவில் செய்தவர்களுக்கு மட்டுமே கெடு பலன்கள் கிடைக்கும். தர்மத்தின் படி நடந்தாலே சனி பகவான் நல்ல பலன்களைக் கொடுப்பார். மாற்றுத் திறனாளிகள், கடைநிலை ஊழியர்கள், இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு தான தர்மம் செய்வது நல்ல பலன்களைத் தரும்.
சிம்ம ராசிக்கு அஷ்டம சனி, தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனி உண்டாகிறது. மார்ச் 29 ஆம் இரவு 11 மணிக்கு மேல் நடைபெறுவதால், 30 ஆம் தேதியன்று கோயில்களுக்குச் சென்று வழிபடுவது நல்லது.