பிரச்சனை மேல் பிரச்சனை - சனி பகவானால் மிரளப்போகும் 3 ராசிகள்
2026 ஆம் ஆண்டு முழுவதும் சனி பகவான் மீன ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார். சனி பகவானின் சஞ்சாரம் குறிப்பாக ஏழரை சனி, அஷ்டம சனி ஆகியவற்றின் நிலைகளை குறிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் மீன ராசிக்குள் நுழைந்த சனி பகவான் ஜூன் மாதம் 2027 வரை மீன ராசியிலேயே சஞ்சரிக்கப் போகிறார். 2026 முழுவதும் சனி பகவானால் சில ராசிகள் மோசமான பலன்களை அனுபவிக்கவுள்ளனர்.

மேஷம்
எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையில் ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கலாம். குடும்பத்தில் பிரச்சனைகள் அல்லது மனக்கசப்புகள் வரக்கூடும். சமூகத்தில் உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் பேச்சிலும் செயலிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சிம்மம்
நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தோல்விகள் அல்லது எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பதில் தாமதங்கள் தடைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவைப்படலாம். அவ்வப்போது உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். குடும்ப உறவுகளில் சிக்கல்கள், மன வருத்தங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில் ரீதியாகவும் சவால்களை சந்திக்க நேரிடலாம்.
கும்பம்
உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிக்கல்கள், மன அழுத்தம் தூக்க பிரச்சனைகள் நீடிக்கக்கூடும். எனவே போதுமான ஓய்வு அவசியம். வேலைகளில் தடைகள், முடிவுகள் எடுப்பதில் குழப்பங்கள், தாமதங்கள் நீடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பணியிடத்தில் மன அழுத்தம், தொழிலில் மந்த நிலை, திட்டமிட்ட பணிகளை முடிக்க முடியாமல் போகலாம்.