ஜாதகத்தில் சனி வக்ரமாக இருந்தால் கடுமையான பாதிப்பு வருமா? பரிகாரம் என்ன?

By Sakthi Raj Sep 18, 2026 09:00 AM GMT
Report

ஜோதிட ரீதியாக சனிபகவான் தான் கர்ம காரகனாக விளங்குகிறரர். ஒரு மனிதன் செய்யக்கூடிய சிந்திக்க கூடிய ஒவ்வொரு செயலுக்கும் பிரதிபலனை வழங்க கூடியவர்.

அந்த வகையில், சனி பகவானுடைய வக்ர இயக்கம் ஜாதகத்தில் மிக முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.

அதாவது சனி வக்ரமாக இருந்தால் அவர்களுக்கு கடந்த கால கர்ம விளைவுகளை பலமாக உணர செய்யும் அளவிற்கு இந்த பிறப்பு அமையும்.

ஜாதகத்தில் சனி வக்ரமாக இருந்தால் கடுமையான பாதிப்பு வருமா? பரிகாரம் என்ன? | Sani Vakra Peyarchi Prediction In Horoscope

2026: நாளை புரட்டாசி மாதம் பிறக்கிறது.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

2026: நாளை புரட்டாசி மாதம் பிறக்கிறது.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

சில நேரங்களில் நன்மையாகவும் சவாலாகவும் இருக்கும். அது மட்டுமில்லாமல் இவர்கள் பிறருடைய கர்மங்களை நிவர்த்தி செய்யக்கூடிய நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.

இவர்களால் ஒருவருடைய கர்ம தாக்கங்கள் குறைந்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி செல்லக்கூடிய நிலை உருவாகும். இவர்கள் கடின உழைப்புகள் வழியாக மிகப்பெரிய அளவில் வெற்றியை பெறுகிறார்கள்.

சனி வக்ரமாக இருக்கக்கூடிய ஜாதகர் பொதுவாக சிந்திப்பதில் மாறுபட்டவராக இருக்கிறார். தனிப்பட்ட முயற்சியில் முயன்று பெரிய வெற்றியை பெறக்கூடிய அமைப்பை பெறுகிறார்.

2026: புரட்டாசி மாதத்தில் தவறவிடக்கூடாத விஷேச நாட்கள்.. முழு விவரம் இதோ

2026: புரட்டாசி மாதத்தில் தவறவிடக்கூடாத விஷேச நாட்கள்.. முழு விவரம் இதோ

இவர்களுக்கு எப்பொழுதும் மனதில் பல கேள்விகளும் சந்தேகங்களும் ஆழமான சிந்தனைகளும் இருக்கிறது.

இவ்வாறு இருப்பவர்கள் எப்பொழுதும் நேர்மையாக இருப்பது அவசியம். சனி பகவானுக்கு மாலை நேரங்களில் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது அவசியம். ஏழை மக்களுக்கும் முதியவர்களுக்கும் கண்டிப்பாக உதவ வேண்டும். அனுமனை வழிபாடு செய்வதும் சனி பகவானுடைய மந்திரங்களை பாராயணம் செய்வதும் முக்கியம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US