சனி பகவானால் எந்த ராசிக்கு சாதகம்?எந்த ராசிக்கு பாதகம்
சனி பகவான் ஒவ்வொரு மனிதனின் செயலுக்கு ஏற்ப நல்லது கெட்டது அருள்புரிவார்.மேலும் ஜோதிடத்தின் படி சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டுகள் ஆகும்.சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிபதியாக திகழ்கிறார்.
ஆதலால் சனி பகவானின் அருள் இந்த ராசிக்காரர்களுக்கு எப்பொழுதும் இருக்கும்.சனியின் அசைவுகள் சில ராசிகளுக்கு சாதகமாவும் சில ராசிகளுக்கு பாதகமாகவும் அமையப்பெறும்.அதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிகாரர்களுக்கு சனிபகவானால் மங்களகரமான செயல் உண்டாகும்.புதிய தொழில் தொடங்குவதால் அதிகமான வரவு உண்டாகும்.மேலும் இடம்,வீடு வண்டி வாகனம் வாங்கும் யோகம் மாற்றம் உண்டாகும்.இந்த சுழலில் அவர்கள் மன குழப்பம் ஏற்படாமல் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
கடகம்:
சனியால் இவர்களுக்கு உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும்.தொழில் மட்டும் வேலை செய்யும் இடங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.தேவை இல்லாத மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும்.குடும்பங்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
மகரம்:
மகர ராசிக்கு சனியால் சிறந்த பலன்களை கொடுக்க போகிறார்.இதனால் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் எல்லாம் விலகும்.தொழில் சம்பந்தமான நஷ்டம் விலகும்.எதிர்பாராத பண வரவால் உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நல்லதோர் மாற்றம் கிடைக்கும்.சமுதாயத்தில் உங்கள் செல்வம் உயரும்.உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும்.குடும்பங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.நேர்மறையான எண்ணங்கள் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |