தாய் சொல்லை தட்டாத சனிபகவான்
சனீஸ்வரர் என்றால் அனைவருக்கும் ஒரு விதமான பயம் உண்டாகும். நம்மை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சனீஸ்வரர் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் பக்குவம் அடைய கஷ்டம் துயரம், துக்கம் போன்றவை கொடுத்து அவர்களுக்கு வாழ்க்கை கற்றுக் கொடுக்கிறார் .இதுதான் உண்மை
மேலும் நாம் ஒவ்வொரு கடவுளை வணங்குவதற்கும் பின் ஒவ்வொரு காரணம் இருக்கிறது.
அதாவது நம் லட்சுமி தேவியை வழிபட்டால் செல்வம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
சக்தியை வழிபட்டால் பலம் கிடைக்கும் என்று நம்புகிறோம் .சரஸ்வதி தேவியை வணங்க கல்வியில் மேம்படுவோம் என்று நம்புகிறோம்.
அப்படி ஒவ்வொரு தெய்வ வழிபாட்டிற்கும் ஒவ்வொரு காரணத்தை வைத்து நாம் வழிபட அந்த பலனும் நமக்கு கிடைக்கிறது.
அதுபோல ஒரு மனிதனுக்கு சுகம் மட்டும் அனுபவித்து கொண்டு இருந்தால் துன்பத்தின் சுகம் தெரியாமல் போய்விடும். மேலும் சுகத்தில் மூழ்கிப்போனவனால் மற்றவர்களின் மனதை காயப்படுத்தி துன்பம் ஏற்படும் கூடும் என்று தான் சனீஸ்வரர் அவர் நம்மை பக்குவம் அடைய செய்ய நம்மை பிடிக்கிறார்.
சனீஸ்வரன் ஒரு மனிதனை பிடிக்கும் பொழுது அந்த மனிதன் ஆழ்ந்த தெய்வ பக்தியில் இருந்தால் சனீஸ்வரனுடைய பாதிப்பு கடுமையும் குறையும்.
அதுமட்டும் அல்லாமல் சனீஸ்வரர் எல்லோரையும் பிடித்திருக்கிறார் இரண்டு தெய்வங்களை தவிர்த்து. அவர்கள் தான் விநாயகப் பெருமான் ஆஞ்சநேயர் .
மேலும் சனீஸ்வரர் யார் சொல்லி கேட்பார் என்று கேட்டால் நம்மை மனிதர்களைப் போல் தாய் சொல்லை தட்டாதவர் சனீஸ்வர்.
அதாவது ,ராமநாதபுரத்தில் உள்ள வழிவிடும் முருகன் கோவிலில் சனிபகவானின் தாயார் சாயாதேவி உள்ளார். இங்கு அவர் சாயா மரம் என்ற பெயரில் மரமாக காட்சி அளிக்கிறார். இக்கோயிலுக்கு வந்து சாயா தேவியை வழிபட , சனிபகவான் தன் கேடு பலன்களை தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு குறைத்துக் கொள்வதாக ஐதீகம் ஏற்படுகிறது.
அதனால் சனி பகவானால் பயம் ஏற்படும் போது அல்ல சனி பகவானால் நமக்கு பாதிப்பு ஏற்பட கூடும் வேலைகள் நாம் இந்த சாயாதேவியை சென்று வணங்கி சனி பகவானுடைய கடுமை நம் மீது இருந்து குறைந்து வாழ்வில் நலம் பெற்று வாழ்வோம்.