மனிதர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 15 முக்கிய இடங்கள்.. என்ன தெரியுமா?
வாழ்க்கை வாழ்வது என்பதும் ஒரு விதமான கலையே. அதாவது மனிதர்கள் பல வகைகளில் இருக்கிறார்கள் அவர்களுடன் நாம் சேர்ந்து பயணிக்கும் பொழுது நிறைய விஷயங்கள் நாம் கற்றுக் கொள்ள முடியும். அதேபோல் நிறைய விஷயங்கள் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலையும் வரும்.
ஆக எந்த இடத்தில் நாம் என்ன பேச வேண்டும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஒரு நுணுக்கமான கலையை கற்றுக் கொள்ளும் பொழுது நம் வாழ்க்கை மிகுந்த சுவாரசியமாக அமைகிறது.
அப்படியாக, மனிதர்கள் அவர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை தவிர்த்து ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ 15 இடங்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவை என்ன விஷயங்கள் என்று பார்ப்போம்.

1. பிற நேரங்களில் நாம் அமைதியாக இருப்பதை காட்டிலும் நம்முடைய கோபத்தை யாராவது தூண்டும் பொழுது அமைதியாக செயல்படுவதை நமக்கு உயர்ந்த நிலையை கொடுக்கும்.
2. ஏதேனும் ஒரு விஷயத்தில் உங்களிடம் உண்மை இல்லை என்றால் அந்த இடத்தில் அமைதியை கடைப்பிடித்து விடுங்கள்.
3. உங்களுக்கு ஏதேனும் ஒரு விஷயம் சரியாக புரியாத நிலை வரும் பொழுது நீங்கள் அமைதியை கடைபிடித்து விடுங்கள். உங்களை அவை காப்பாற்றும்.
4. ஒரு இடத்தில் நீங்கள் பேசக்கூடிய வார்த்தை ஒரு எளியவரை காயப்படுத்தும் என்றால் அந்த இடத்தில் நீங்கள் அமைதியை கடைப்பிடிப்பது தவிர வேற வழியில்லை.
5. ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்கும் பொழுது அமைதியாக இருங்கள். அப்பொழுது தான் முழுமையாக கற்றுக் கொள்ள முடியும்.
6. ஒரு நிகழ்வு உங்களை தூய சிந்தனைக்குள் தூண்டும் நேரத்தில் அமைதியை காப்பதால் பல விஷயங்களை புரிந்து கொள்ள முடியும்.
7. சில நேரங்களில் நாம் தேவையில்லாமல் பேசுவதால் அந்த இடங்களில் நம் அவமானம் நேரும் என்றால்அங்கு, நம்முடைய பேச்சு நம்மை அவமானம் செய்யும் முன் அந்த இடத்தில் அமைதி காப்பதே சிறந்த யுக்தியாகும்.
8. நீங்கள் எந்த நேரத்திலும் பாவத்தை பற்றி நகைச்சுவையாக பேசும் முன் அமைதி காத்து விடுங்கள்.
9. உங்களுக்கு தொடர்பில்லாத ஒரு விஷயத்தில் சிக்கும் பொழுது நீங்கள் அமைதி காத்து விடுங்கள்.
10. சூழ்நிலையால் நீங்கள் பொய் பேசுவதற்கு தள்ளப்படும் பொழுது அமைதி காத்து விடுங்கள். மிகப்பெரிய புண்ணியம் செய்கிறோம்.
11. உங்களுடைய பேச்சு உங்களுடைய சந்தோஷத்தை கெடுக்குமாயின், அந்த நேரத்தில் அமைதி காத்து விடுங்கள்.
12. நீங்கள் தேவை இல்லாமல் பேசுவதால் ஒரு நட்பு கெட்டுப் போகும் எனில் நிச்சயம் அந்த இடத்தில் அமைதி காத்து விடுங்கள்.
13. வாழ்க்கை உங்களை எவ்வளவு பெரிய நெருக்கடியான நிலையில் விட்டாலும் அமைதி காத்து விடுங்கள் மீண்டு வந்து விடலாம்.
14. ஒரு கூட்டத்தில் ஒரு விஷயத்தை ஒரு முறைக்கு இருமுறை சொல்லி விட்டீர்கள் என்றால் அமைதி காத்து விடுங்கள். உங்களுடைய மதிப்பு காக்கப்படும்.
15. உங்களுடைய பேச்சு ஒருவருக்கு எந்த ஒரு பயனும் இல்லாத என்று நீங்கள் உணரும் பொழுது அமைதியாக இருந்து விடுங்கள். உங்கள் மன அமைதி காக்கப்படும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |