2026 ஆபத்தான அங்காரக யோகம்: கட்டாயம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
ஜோதிடத்தில் ஒருவருக்கு வலிமையை கொடுக்கக்கூடிய கிரகம் என்றால் அது செவ்வாய் பகவான் தான். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை அவருடைய ராசியை மாற்றுகிறார். அவ்வாறு செவ்வாய் பகவான் அவருடைய ராசியை மாற்றும் பொழுது அந்த தாக்கம் 12 ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி செவ்வாய் பகவான் கும்ப ராசிக்குள் நுழைகிறார். அங்கு ஏற்கனவே சனி பகவானுடன் செவ்வாய் இணைவதால் அங்காரக யோகம் உருவாகிறது. இதனால் குறிப்பிட்ட ஒரு சில ராசியினர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இந்த காலகட்டமானது மிகவும் அவசரமான முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரு நிலை வரும். ஆனால் இவர்கள் பொறுமையாக நிதானமாக பெரியவர்களின் ஆலோசனை கேட்டு செயல்படும் போது மட்டும்தான் இவர்கள் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல் காரணமே இன்றி மன அழுத்தத்திற்கு நீங்கள் ஆளாக நேரும்.
மகரம்:
மகர ராசியினருக்கு திடீர் என்று தேவை இல்லாத செலவுகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வேலை பளு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் குடும்பத்தினருடைய தேவை இல்லாத தலையீடுகளால் பிரச்சினைகளை நீங்கள் சந்திக்கலாம். தொழில் ரீதியாக நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். யாரை நம்பியும் இந்த காலகட்டங்களில் எந்த வேலையையும் கொடுக்காதீர்கள்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இந்த யோகமானது ஒரு விவேகத்தை கொடுக்கப் போகிறது என்றாலும் நிச்சயம் அது அவர்களுக்கு ஒரு பாதகமான நிலையையும் சேர்த்தே கொடுக்கப் போகிறது. அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த கவனம் வேண்டும். கோபத்தை முடிந்த அளவிற்கு கட்டுப்படுத்தினால் மட்டுமே நீங்கள் மகிழ்ச்சியாக வாழலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |