சந்திரன் குரு சேர்க்கை:எந்த 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை அள்ள போகிறார்கள்
ஜோதிடத்தில் சந்திரன மனம் சம்பந்தப்பட்டவராக சொல்லப்படுகிறார்.அதாவது சந்திரன் ஒரு ராசியை மாற்றும் பொழுது அதனுடைய தாக்கம் 12 ராசிகளிலும் காணமுடியும்.ஆக ஜோதிஷ கணக்குப்படி மார்ச் 5ஆம் தேதி அதாவது சந்திரன் ரிஷப ராசிக்குள்ள நுழைகிறார்.ரிஷப ராசியில் ஏற்கனவே குரு பகவான் இருந்து வருகிறார்.
இதனால் ரிஷப ராசியில குருவும் சந்திரனும் சேர்றது கஜகேசரி ராஜயோகத்தோட அற்புதமான சேர்க்கையா இருக்கும்.ஜோதிட சாஸ்திரத்தில் கஜகேசரி ராஜயோகம் மிக சிறந்த பலன் கொடுக்கும்.கஜகேசரி யோகத்தால சில ராசிக்கு நல்ல மாற்றம் கொடுக்கும்.அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதார வளர்ச்சி மிகவும் அமோக இருக்கும்.வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.ஒரு சிலருக்கு உயர் பதவிகள் கிடைக்கும்.உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள்.தொலை தூரத்தில் இருந்து நற்செய்திகள் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் மன நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும்.கைக்கு வராத பணம் உங்களை தேடி வரும்.ஒரு சிலருக்கு வெளிநாடு சென்று வேலை பார்க்கும் யோகம் உருவாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கை மிக சந்தோஷமாக அமையும்.இரண்டாவது திருமண செய்ய விரும்புவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் உண்டாகும்.வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.பெரியவர்கள் ஆதரவு முழுமையாக இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |