இன்று சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம்
நவராத்திரி தொடங்கி இன்று ஒன்பதாவது நாள்.அன்றைய தினத்தில் தான் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.இன்று வீடுகளில் நாம் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவிக்கு நைவேத்தியம் எல்லாம் படைத்து வழிபாடு செய்வோம்.
அப்படியாக சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடும் சரியான நேரம் பற்றி பார்ப்போம்.
காலையிலே பூஜை செய்ய முடியும் என்று நினைப்பவர்கள் பூஜைக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டு காலை 08.00 முதல் 09.00 வரை உள்ள நேரத்தில் வழிபாடு செய்யலாம்.
முடியாதவர்கள் பிற்பகல் 01.00 முதல் 01.45 வரை நேரத்தில் வாழிபாடு செய்யலாம்.தொழில் செய்பவர்கள் இல்லை பிற வேலைகளில் பிஸியாக இருப்பர்வர்கள் மாலை 05.00 முதல் 06.00 வரை உள்ள நேரத்தில் வழிபாடு செய்யலாம்.
அதையும் தவற விட்டவர்கள் இரவு 08.00 முதல் 09.00 வரை உள்ள நேரத்தி பூஜைக்கான ஏற்பாடுகள் செய்து தங்களுடைய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
நவராத்திரி ஒன்பது நாட்களும் வெகு சிறப்பாக கொண்டாட்டம் நடைபெற்ற வகையில் அந்த ஒன்பது நாட்களில் விரதம் இருந்து பூஜை மேற்கொள்ள முஐடியாதவர்கள் இன்று அன்னையின் அருளை பெரும் வகையில் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம்.
இந்துக்கள் பண்டிகையில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை மிக முக்கியமாக கருதப்படுகிறது.ஏனினில் இது ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட விஷயமாக இந்த பூஜை இருக்கிறது.
அதாவது மனிதன் வாழ்க்கையில் நல்ல படியாக படித்து தொழில் தொடங்கி முன்னேற்றம் அடைய வேண்டும் என்று குறிக்கோளுடன் ஓடி கொண்டு இருக்கிறோம்.அந்த நோக்கத்திற்கு கூடுதல் அருள் பெறவும் அதற்கு அதிபதியான அன்னையை போற்றும் வகையில் இந்த பூஜை முக்கியமாக கொண்டப்படுகிறது.
இந்த நாட்களில் அன்னையை வழிபட தொழில் மட்டும் படிப்பில் ஏற்பட்ட தடங்கல் விலகி வாழ்க்கையில் நல்ல சாதனையாளராக வர அன்னையின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |