நாராயண துதி 108
மாயோன் மேய கட்டுரை உலகமும் என்று தொல்காப்பியர் முல்லை நிலத்தின் இறைவனாக கருப்பு நிற கடவுளை குறித்தார். அவனை ஆயர் குலக் கடவுளாக கார்மேகவண்ணன், நீலமேகக் கண்ணன், யாதவர் குலத் திலகம் சியாமளவண்ணன் என விளங்கும் வட நாட்டுக் கிருஷ்ணனுடன் இணைத்து விட்டனர்.
வைணவம் பெருமாளை 'எளிவந்த பிரானாக' காட்டுகின்றது. பெருமாள் மனிதரிடம் இறங்கி வந்து 'துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனம்' செய்வதை திருமாலின் அவதாரங்கள் என்பர். பத்தோடு பதினொன்றாக கௌதம புத்தரையும் சிலர் திருமாலின் அவதாரமாக கொள்வர்.
திருமால் அவதாரங்களில் ராமனையும் கண்ணனையும் பெருவாரியான மக்கள் வழிபடுகடவுளாகக் கொண்டுள்ளனர். இவர்கள் தவிர பெருமாள் என்ற பொதுப் பெயரிலும் வணங்குகின்றனர். வேங்கட மலையின் பெருமாள் வெங்கடேசப் பெருமாளாகப் பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார்.
பெருமாள், திருமால், ராமச்சந்திர மூர்த்தி, கண்ண பரமாத்மா மற்றும் வேங்கடவனை வண்ங்குவோர் கோயிலுக்குப் போகும் போதும் வீட்டில் இருந்தபடி பெருமாளை செவிக்கும் போதும் பிணவரும் எளிய புரிந்துகொள்ள கூடிய, பல ஊர்களிலும் கோயில் கொண்டுள்ள பகவானின் பெயர்களைச் சொல்லித் துதியுங்கள்.
ஓம் நமோ நாராயணாயா போற்றி
ஓம் கோவிந்தா போற்றி
ஓம் கிருஷ்ணா போற்றி
ஓம் பலராமா போற்றி
ஓம் ஹரிகிருஷ்ணா போற்றி 5
ஓம் வெங்கடேஸ்வரா போற்றி
ஓம் ஜெகநாதா போற்றி
ஓம் தாமோதரா போற்றி
ஓம் மாதவா போற்றி
ஓம் நந்தகோபாலா போற்றி 10
ஓம் கேசவா போற்றி
ஓம் ரகுநந்தா போற்றி
ஓம் யோகநரசிம்மா போற்றி
ஓம் தனஞ்செயா போற்றி
ஓம் முகுந்தா போற்றி 15
ஓம் வடபத்ர சாயி போற்றி
ஓம் செந்தாமரை கண்ணா போற்றி
ஓம் கார்மேக வண்ணா போற்றி
ஓம் கோபிகா நேசா போற்றி
ஓம் ராமச்சந்திரா போற்றி 20
ஓம் பக்தவத்சலா போற்றி
ஓம் பத்மநாபா போற்றி
ஓம் மதுசூதனா போற்றி
ஓம் அச்சுதா போற்றி
ஓம் ஆதித்யா போற்றி 25
ஓம் அனிருத்தா போற்றி
ஓம் தேவதேவா போற்றி
ஓம் ஜனார்த்தனா போற்றி
ஓம் கமல நாதா போற்றி
ஓம் லட்சுமி காந்தா போற்றி 30
ஓம் முரளீதரா போற்றி
ஓம் நந்தகுமார் போற்றி
ஓம் நாராயணா போற்றி
ஓம் நவநீதக் கண்ணா போற்றி
ஓம் பார்த்தசாரதி போற்றி 35
ஓம் புருஷோத்தமா போற்றி
ஓம் சத்தியவரதா போற்றி
ஓம் சத்தியகிரிசா போற்றி
ஓம் வேத நாராயணா போற்றி
ஓம் பத்ரிநாதா போற்றி 40
ஓம் ரங்கநாதா போற்றி
ஓம் பத்மநாபா போற்றி
ஓம் துவாரகா போற்றி
ஓம் வெங்கடேஸ்வரா போற்றி
ஓம் அஸ்வக்லாந்தா போற்றி45
ஓம் ஆதிகேசவா போற்றி
ஓம் சாரங்கபாணி போற்றி
ஓம் லட்சுமி நாராயணா போற்றி
ஓம் விட்டலா போற்றி
ஓம் கூடல் அழகா போற்றி 50
ஓம் வைகுந்த நாதா போற்றி
ஓம் தேவராஜா போற்றி
ஓம் லக்ஷ்மி ரமணா போற்றி
ஓம் ஜெகதீஷா போற்றி
ஓம் மலையப்பா போற்றி 55
ஓம் வரதராஜா போற்றி
ஓம் அழகிய மணவாளாபோற்றி
ஓம் ஜெகத்ரட்சகா போற்றி
ஓம் ஸ்ரீனிவாசா போற்றி
ஓம் சாரநாதா போற்றி 60
ஓம் சவுரி ராஜா போற்றி
ஓம் லோகநாதன் போற்றி
ஓம் லட்சுமி நரசிம்மா போற்றி
ஓம் கோபாலகிருஷ்ணா போற்றி
ஓம் பார்த்தசாரதி போற்றி 65
ஓம் சந்திர சூடப் பெருமாள் போற்றி
ஓம் திரு விக்ரமப் பெருமாள் போற்றி
ஓம் கருணாகர பெருமாள் போற்றி
ஓம் சொர்ணநாதபெருமாள் போற்றி
ஓம் உய்ய வந்த பெருமாள் போற்றி 70
ஓம் தேவநாதா போற்றி
ஓம் தீபப்பிரகாசிகா போற்றி
ஓம் விஜயராகவா போற்றி
ஓம் சுந்தர் ராஜா போற்றி
ஓம் வீர ராகவா போற்றி 75
ஓம் ஸ்ரீ வத்சா போற்றி
ஓம் ஸ்ரீதரா போற்றி
ஓம் கீதாச்சாரியா போற்றி
ஓம் ரிஷிகேஷா போற்றி
ஓம் பண்டரி நாதா போற்றி 80
ஓம் பரந்தாமா போற்றி
ஓம் கருடாரூடா போற்றி
ஓம் சூரிய நாராயணா போற்றி
ஓம் பஞ்சாயுதபாணி போற்றி
ஓம் ஹரிஹர போற்றி 85
ஓம் ரங்கநாதா போற்றி
ஓம் வடிவழகிய நம்பி போற்றி
ஓம் பவளக்கனிவாய் பெருமாள் போற்றி
ஓம் பிரசன்ன வெங்கடேசா போற்றி
ஓம் அனந்த சயனப் பெருமாளே போற்றி 90
ஓம் வைத்தமாநிதி போற்றி
ஓம் சக்கர தாரா போற்றி
ஓம் ஜலபதி போற்றி
ஓம் திருமலை நாதா போற்றி
ஓம் வசுதேவா போற்றி 95
ஓம் குருவாயூரப்பா போற்றி
ஓம் கோவர்த்தன கிரிநாதா போற்றி
ஓம் உன்னி கிருஷ்ணா போற்றி
ஓம் கேடிலியப்பா போற்றி
ஓம் கோதண்டராம போற்றி 100
ஓம் உபேந்திரா போற்றி
ஓம் உலகளந்தான் போற்றி
ஓம் பாண்டுரங்கா போற்றி
ஓம் ஸ்ரீ காந்தா போற்றி
ஓம் சியாமளசுந்தரா போற்றி105
ஓம் விஜயராகவா போற்றி
ஓம் கீதபோதனா போற்றி
ஓம் வனமாலி போற்றி 108
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |