சர்ப்ப தோஷம் விலக செய்யவேண்டிய பரிகாரங்கள்
திருமணம் என்று வரும்பொழுது தான் நம் ஜாதகத்தில் உள்ள தடைகள் தோஷங்கள் பற்றி தெரிந்துகொள்வோம். ஒருவருக்கு ஜாதகத்தில் தடைகள் மற்றும் தோஷங்கள் இருந்தால் ஜோதிடர்கள் அந்த தோஷ நிவர்த்தி ஆகும் இடத்திற்கு சென்று வர சொல்லுவார்கள்.
அப்படியாக ஒருவரது ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் இருக்க அவர்கள் செல்ல வேண்டிய இடம் ராமநாதபுரத்தில் அமைந்து இருக்கும் தேவிபட்டினம் என்னும் ஊர்ஆகும்.
இங்கு தான் கடற்கரையை ஓட்டி அமைந்திருக்கிறது நவபாஷாண நவக்கிரக திருக்கோயில். மேலும் குறைந்தது 2000 வருடங்களுக்கு மேலாக கடலில் இந்த நவகிரக கோயில் உள்ளதாக குறிப்பிடபடுகிறது. இங்கு ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியே ஸ்தாபித்த நவகிரகங்களே பிரதான தெய்வங்களாக இருக்கின்றனர்.
மேலும் இந்த கோயில் புனித தீர்த்தமாக கடல் நீரே இருக்கின்றது. இன்னும் கூடுதல் விஷேசம் என்னவென்றால் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே தனது கைகளால் கடலுக்கு நடுவில் பிரதிஷ்டை செய்த நவகிரகங்கள் இருக்கின்றன.
ஆதலால் இந்த நவபாஷாண சக்திகள் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. இங்கு தான் ஸ்ரீ ராம பிரானுக்கு சனி தோஷம் நீங்கியதாகவும்.சிவன் மற்றும் பார்வதி தேவியின் ஆசிகிடைத்து ராவணனுடைய போரில் வெற்றி பெற்றதாகவும் பல புராணங்கள் சொல்கிறது.பல்லாயிரம் ஆண்டு காலம் இந்த நவக்கிரகங்கள் கடலில் இருந்தாலும் இன்னும் நல்ல விதமாக அமைந்திருப்பது அதிசயம் தரக்கூடியவை.
மேலும் ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் இந்த கடல் தீர்த்தத்தில் நீராடி இங்கிருக்கும் நவக்கிரகளுக்கு நவதானியங்கள் சமர்ப்பித்து ஒன்பது முறை வலம் வந்து வழிபட்டு அன்னதானம் செய்தால் நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும்.
மேலும் பித்ரு சாபங்கள்,முன் பிறவி பாவங்கள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளை நீக்க சிறந்த பரிகாரத் தலமாக தேவிபட்டினம் விளங்குகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |