கண் நோய் தீர்க்கும் கன்னியாகுமரி அஞ்சன சாஸ்தா
கன்னியாகுமரி அஞ்சன சாஸ்தா கோவில் சுசீந்திரம் அருகே ஆசிராமம் என்ற இடத்தில் அமைந்துள்ளது ஆராகமம் என்றால் பௌத்த ஆலயங்களின் அருகில் இருக்கும் பூந்தோட்டம் அல்லது மூலிகை வனம் ஆகும். இங்கு மூன்று அரிய வகை வில்வ மரங்கள் உண்டு. அரிய மரங்களின் வழிபாடு நடந்த இடங்களில் கோயில்கள் வந்த பிது அவை ஸ்தல விருட்சங்கள் ஆகின. ஆராகமம் இப்போது ஆசிரமம் என்று பெயர் திரிந்துள்ளது.
கருவறை நாதர்
அஞ்சன சாஸ்தா கருவறை நாதராக அருள் பாலிக்கின்றார்.கருவறை நாதரின் மேல் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. அஞ்சன சாஸ்தாவின் உருவம் மிகவும் அழகானது. உச்சி கொண்ட இட்டு கண்களுக்கு மை எழுதி அழகாக காட்சி தருக்கிறார்.
தோள்களில் சுருள் கேசம் நெளியும். பூணூல் அணிந்து இருப்பார்.நெற்றியில் திருநீறு பூசி இருப்பார். கழுத்தில் பதக்கமும் கைகளில் வங்கி மற்றும் காப்புகளும் அணிந்திருப்பார்.
வீராசனம்
அஞ்சன சாஸ்தா, ராஜ கோலத்தில் வீராசனத்தில் காட்சி தருவார். வீராசனம் என்பது ராஜகோலம் ஆகும். ஒரு காலை மடக்கி ஒரு காலை தொங்கவிட்டு அமர்வதாகும் மடக்கி இருக்கும் காலின் மீது கையை நீட்டியிருப்பதும் ராஜகோலம் ஆகும். சாஸ்தா தன் இடது காலை மடக்கி அமர்ந்து இருப்பர். இடது முழங்காலின் மீது தன் இடது கையை நீட்டி வைத்து மற்றொரு காலைத் தொங்க விட்டிருப்பா. வலது கையில் செண்டாயுதம் வைத்திருப்பார்.
மற்ற சாஸ்தா சிலைகளை விட கன்னியாகுமரி அஞ்சன சாஸ்தா சிலை மிகப் பெரிய சிலை ஆகும். இதன் எதிரே யானை வாகனமும் குதிரை வாகனமும் உள்ளது. கோவிலின் உள்ளே நாகரும் கணபதி சிலைகளும் தனித் தனியாகக் காணப்படுகின்றன.
திருச்சுற்றுத் தெய்வங்கள் கோவில்
வளாகத்திற்குள் மாடன் தம்பிரான், பூதத்தார்,ஈனன், வன்னியர் ஆகிய தெய்வங்கள் காணப்படுகின்றன. கோவிலுக்கு வெளியே தீர்த்தம் உள்ளது.
யாக குண்ட தீர்த்தம் கதை
யாக குண்ட தீர்த்தத்துக்கு சொல்லப்படும் கதை மற்ற சிவன் கோவில்களிலும் பரவலாக சொல்லப்படும் கதை ஆகும். இந்த கதை ஆசிராமம் (ஆராகமம்) மற்றும் குண்டம் (பெரிய குழி) என்ற சொற்களை அடிப்படையாக கொண்டு அவற்றிற்குப் புதிய அர்த்தம் கற்பிக்கும் பொருட்டுத் தோன்றியதாகும். இந்த ஊரில் அத்திரி ரிஷி ஓர் ஆசிரமம் அமைத்து தங்கியிருந்தார்.
அவருடைய மனைவி அனுசூயா தேவியார். தன் கணவரின் அன்றாட தவ யோக கடமைகளில் தானும் தவறாது பங்கெடுப்பார். அவருக்கு வேண்டிய உதவிகளையும் அனைத்துப் பணிவிடைகளையும் செய்வார். அவளுடைய பதிபக்தியை உலகறிய செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் மும்மூர்த்திகளும் பூலோகத்திற்கு வந்தனர். மும்மூர்த்திகள் துறவிகளாக வேடமிட்டு அத்திரி மகரிஷியின் குடிலை அணுகினர்.
ரிஷி செய்யும் யாகத்தில் தாங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றால் தங்களுக்குப் பசியமர்த்த வேண்டும் என்றனர். அனுசுயா தேவி மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு உணவு தர ஆயத்தமானாள். ரிஷிகள் மூவரும் 'அம்மா எங்களுக்கு ஒரு வேண்டுதல் உண்டு. அந்த வேண்டுதலை நிறைவேற்றினால் மட்டுமே நாங்கள் தங்கள் இல்லத்தில் உணவருந்த இயலும் ' என்று கூறினர். '
ஐயா தங்கள் வேண்டுதலை எடுத்துக் கூறுங்கள். நான் அதனை நிறைவேற்றி வைப்பேன். பின்பு நீங்கள் பசியாறலாம்' என்றாள். 'எங்களுக்கு உணவூட்டும் பெண் எவ்வித ஆசைகளும் பற்றும் அற்றவராக நிர்வாண கோலத்தில் வந்து உணவு படைக்க வேண்டும்' என்றனர். 'பசி அமர்த்த வேண்டும். என்றனர். 'சரி என்றாள்.
ரிஷி பத்தினி தன்னுடைய கற்பின் திறத்தால் மூன்று ரிஷிகளையும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளாக மாற்றினாள். இப்போது மூன்று குழந்தைகள் அவள் குடிலில் பசியோடு அழுது கொண்டிருந்தன. அவள் அந்த முனிவர்கள் கேட்டுக் கொண்ட படி உடை அற்ற நிலையில் வந்து ஒவ்வொரு குழந்தையாக எடுத்து அமிர்தப்பால் ஊட்டினாள். குழந்தைகள் பசி அமர்ந்ததும் அழுகையை நிறுத்தி சிரித்து கால் கையை உதைத்து விளையாடின.
அந்நிலையில் அவள் உடைமாற்றிக் கொண்டு வந்து அந்த மூன்று குழந்தைகளின் மீது தீர்த்தத்தை தெளித்து மீண்டும் ரிஷிகளாக மாற்றினாள். இப்போது ரிஷிகளுக்கு பசி இல்லை. என்ன நடந்து இருக்கும் என்று அவர்கள் ஞானக் கண்ணால் புரிந்து கொண்டனர். அத்திரி மகரிஷியின் யாகத்தில் மூவரும் கலந்து கொண்டனர். அன்று யாக குண்டம் இருந்த இடத்தில் இப்போது தீர்த்த குளம் உள்ளது .
அஞ்சனத்துக்கு ஒரு கதை
கண் தெரியாத ஒருவர் ஒரு மரத்தடியில் படுத்திருந்தார். அப்போது அருகில் வந்து யாரோ அமர்ந்ததை உணர்ந்தார். அவரால் எழும்ப இயலவில்லை. அருகில் அமர்ந்திருந்தவர் இவருடைய கண்களில் எதையோ தடவுவதைப் போல் இவர் உணர்ந்தார்.
சிறிது நேரத்தில் அவர் கண்கள் குளிர்ச்சி அடைந்து மெல்ல மெல்ல பார்வை தெரிய ஆரம்பித்தது. கண் விழித்துப் பார்த்தபோது தன் அருகில் இருந்தவரைக் காணவில்லை. அஞ்சனம் எழுதிக் கண் பார்வை வரவழைத்தார் என்பதை புரிந்து கொண்ட அவர் அஞ்சன சாஸ்தாவுக்கு அவ்விடத்தில் கோவில் எழுப்பினார்.
கதை 3
வில்வ மரங்கள் மூன்று
மூன்று மூர்த்திகளும் ஒரே ரூபமாக தாணுமாலய சுவாமி கோவிலில் தாணுலிங்கேஸ்வரர் என்ற் பெயரில் காட்சி தருகின்றனர். இக் கோவிலுக்கு அருகில் சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆசிரமம் என்ற இவ்ஊரில் அவர்கள் மூன்று வில்வ மரங்களாக மாறி நின்றனர் இந்த மூன்று வில்வம் மரங்களில் ஒரு மரத்தில் ஒரு காம்பில் மூனறு இலையும் அடுத்த மரத்தில் ஐந்து இலையும் மற்றொரு மரத்தில் ஒன்பது இலைகளும் உள்ளன.
வழிபாட்டின் பலன்
அஞ்சன சாஸ்தா குமரி மாவட்டத்தில் வும் இலட்சக்கணக்கான மக்களுக்கு குல தெய்வம் ஆவார். கண் நோய் தீர இக்கோயிலுக்குத் தொடர்ந்து வந்து வழிபட வேண்டும். சாஸ்தா கோயிலில் உள்ள நாகர் பிள்ளைப்பேற்றை தர வல்லவர். இங்கிருக்கும் பூதத்தாரும் , மாடனும் பில்லி சூனியம்.போன்ற தீய சக்திகளை அகற்ற வல்லவர்கள். சகல நோய்களை தீர்க்கும் மருத்துவ திலகமாக் அஞ்சன சாஸ்தா விளங்குகிறார்.
சாஸ்தா பெயர்க்காரணம் அஞ்சனம் என்பது கண்களில் தீட்டப்படுவதாக இருந்தாலும் அது ஒரு மருந்தாகும். பௌத்த மடங்கள் மற்றும் கோயில்கள் இங்கு இருந்த காலத்தில் அவற்றில் கண் மருத்துவ பிரிவு தனியாக செயல்பட்டது.
அவை சிவன் கோயில்களாக பக்தி இயக்கக் காலத்தில் மாற்றப்பட்ட போது அங்குள்ள சிவன் நேத்திரபுரீச்வரர் கண்ணாயிர நாதர், என்றும் விநாயகர் நேத்திர விநாயகர் என்று கண் தொடர்பான பெயர்களுட அழைக்கப்பட்டனர். அம்பாள் கண்ணம்மை, ஆயிரம் கண்ணுடையாள், ஊர்கள் கண்ணனுர், கண்ணபுரம் எனப்பட்டன. இவை பௌத்தம் செல்வாக்குடன் இருந்த திருச்சி தஞ்சை நாகப்பட்டினம் மாவட்டங்களில் மிகுதி.
அஞ்சாணம் தீட்டுதல்
அஞ்சனம் பழைய மருத்துவ முறைகளில் முக்கிய மருந்து ஆகும். கண்ணுக்கு மேலேயும் கீழேயும் நீர் கோர்த்து இருக்கும்போது சைனஸ் தொந்தரவால் மனிதர்கள் அவதிப்படும்போது பழைய பௌத்த மடத்தின் துறவிகள் அஞ்சனம் என்ற மருந்தை கண்களில் தடவுவர். கங்கள் எரிந்து நீர் கொட்டும். அந்த மருந்தை தடவியதும் சைனஸ் பையில் கோர்த்திருந்த நீர் கண்களின் வழியாக வடியும்.
இது ஒரு வகையான சிகிச்சை முறை. கண்களுக்கு மையிடுவது கண்களின் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்திருக்க வேறொரு அஞ்சனம் / மை தீட்டுவர். எனவே அஞ்சனம் என்பது மருந்து பொருள் ஆகும். மருத்துவ சேவை செய்யும் இடங்களில் மும்பு மருத்துவ புத்தரின் (Medicine Buddha) சிலைகள் இருந்தன.
அஞ்சன சாஸ்த ஓர் மருத்துவ புத்தர்.அஞ்சன வைத்தியத்தில் கைதேர்ந்தவர் என்பதால் இவரை அஞ்சன சாஸ்தா என்று அழைத்தனர். சாஸ்தா என்பது புத்தரின் பெயராகும். ஆரம்பத்தில் சாத்தான், சனக்கியன் என்றனர். பின் சம்ஸ்கிருத ஒலியேற்றி (sanskiritisation) சாஸ்தா என்று சம்ஸ்கிருதமயமாக்கினர்.
பௌத்த சமயம் வெளியேற்ற பட்ட பின்பு கிபி ஏழாம் நூற்றாண்டுக்கு பின்பு மருத்துவ புத்தர் கோயில்கள் சிவனுடன் தொடர்புடைய கோயில்களாக மாறின. சாஸ்தாவுக்கு அத்திரி மகரிஷி மற்றும் அவர் மனைவி அனுசுயாவின் கதை சேர்க்கப்பட்டது.
சமய ஒருங்கிணைப்பு (Religious Synchronization)
நாகர் வழிபாடு தொல்தமிழரின் முன்னோர் வழிபாடு ஆகும். மர வழிபாடும் பழந்தமிழ்ர் காலத்தது. இவ்விரண்டையும் இணைத்தது பௌத்த சமயம். இவ்விரண்டோடு மருத்துவ புத்தர் வழிபாட்டையும் சேர்த்து மூன்றையும் தன்னுடையதாக மாற்றியது சைவ சமயம் ஆகும். இதனை சமய ஒருங்கிணைப்பு என்பர்.
விநாயகர் இணைப்பு
நாகர் வழிபாடு இருக்கும் இடங்களில் கிமு 3,4ஆம் நூற்றாண்டுகளில் யானை முக உருவத்தில் கௌதம புத்தர் சிலை கொண்ட பௌத்தக் கோவில்கள் கட்டப்பட்டன. விநாயகர் வழிபாடும் இணைந்து கொண்டது அரச மரத்தின் அடியில் கௌதம புத்தருக்கு ஞானோதயம் கிடைத்ததனால் அவருக்கு யானை முகச்சிலைகளை அரச மரத்தடியில் வைத்தனர்.
இவரை மிகவும் சிறந்தவர், பெருந்தலைவர் என்ற பொருளில் வி - நாயகர் (விசேஷமான தலைவர்) என்றனர். கி பி ஏழாம் நூற்றாண்டுக்கு பிறகு பக்தி இயக்க காலத்தில் சமண பௌத்த மதங்களின் ஆதிக்கம் குறைந்து சைவ சமய ஆதிக்கம் அதிகரித்தது. அப்போது விநாயகர் சிவபெருமானின் மகனாகவும் கருதப்பட்டார். வேலன் சுப்ரமணியர் ஆனான். சாஸ்தா ஹரிஹரபுத்ரன் ஆனான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |