35 வயதுக்கு மேல் செல்வந்தராகும் யோகம்.. ஜாதகத்தில் சனி தரும் அதிர்ஷ்டம்
ஜோதிட நம்பிக்கையின் படி சனி பகவான் கர்ம காரகனாக விளங்குகிறார். சனி பகவான் எப்பொழுதுமே ஒருவருக்கு மெதுவாக ஒரு விஷயத்தை கொடுத்தாலும் நிலையானதாக கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். அதேபோல், சனியின் செயல்களை கவனித்தால் புரியும் எப்பொழுதும் எந்த மனிதனுக்கும் தீங்கு செய்வதில்லை.
அவர் கொடுக்கக்கூடிய அந்த பாடமானது கடுமையாக இருந்தாலும் அந்த பாடத்தின் விளைவாக அந்த மனிதர் சுற்றி உள்ள உண்மைகளையும் அவர்களைப் பற்றிய புரிதலையும் பெற்றுக் கொள்கிறார்கள். மேலும், "சனி கொடுக்க எவர் தடுப்பார்" என்கின்ற ஒரு வாக்கியம் இருக்கிறது.

2026: இழந்ததை இரட்டிப்பாக பெறப்போகும் மீன ராசியினர்.. டிசம்பர் மாதம் காத்திருக்கும் நற்செய்திகள் என்ன?
இதற்கு காரணம் சனி பகவான் ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது. அதே போல், ஒருவரிடம் இருந்து ஒன்றை எடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதை யாராலும் தடுக்க முடியாது.
அப்படியாக, ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் சிறுவயதில் வறுமையும் முதுமையில் செல்வந்தராக வாழக்கூடிய வாழ்க்கையை கொடுக்கக்கூடிய கிரகமாக சனி பகவான் இருக்கிறார்.

அதாவது ஒருவருக்கு லக்னத்தில் இரண்டாம் இடத்தில் சனி நின்று இந்த சனி பகவான் சுக்கிரன் அல்லது குருவை தொடர்பு கொள்கின்ற பொழுது அந்த ஜாதகருக்கு இளமையில் வறுமையை சந்தித்தாலும் சுமார் 35 முதல் 40 வயதுக்கு மேல் அந்த ஜாதகர் வாழ்க்கையில் நிறைவான தன பிராப்தத்தை பெறுகிறார்.
இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு பிற்காலங்களில் வரக்கூடிய வருமானமே நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய ஒரு வருமானமாக இருக்கும் அளவிற்கு ஒரு சூழ்நிலையை சனி பகவான் உருவாக்கி கொடுக்கிறார்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |