ஜாதகத்தில் சனி பகவானுடன் இந்த கிரகம் உள்ளதா? இந்த பிரச்சனை எல்லாம் வருமாம்
ஜோதிட ரீதியாக சனி பகவான் என்பவர் கர்ம காரர்களாக இருப்பவர். மேலும், நீங்கள் இந்த உலகத்தில் உங்களுக்கு அநீதி நடக்கிறது என்று எப்பொழுதும் உடைந்து போகிறீர்களோ அப்பொழுது சனி பகவானை நம்புங்கள். உங்களுடைய அநீதிக்கான நியாயத்தை வெற்றியும் ஒரு நாள் பெற்றுக் கொடுப்பார்.
அப்படியாக, ஜாதகத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கக்கூடிய இடம், அவர் பார்க்கக்கூடிய பார்வையும் அவருடன் இணைந்து இருக்கக்கூடிய கிரகமும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அப்படியாக, சனி பகவானுடன் எந்த கிரகம் இணைந்து இருக்கிறதோ அதற்குரிய பலனை பற்றி பார்ப்போம்.

சனி சூரியன்:
இந்த இணைவு இவர்களுக்கு அதிகார மோதல்கள், பல நேரங்களில் அகந்தை சார்ந்த பிரச்சனைகள் தலைமைத்துவ பொறுப்புகளில் சவால்கள், தாமதம் ஆகியவை கொடுக்கும்.
சனி சந்திரன்:
இவர்களுக்கு உணர்ச்சிகள் வெளிப்படுத்துவதில் தயக்கம், மனதில் தீவிரமான சிந்தனைகள், மன உறுதி மற்றும் துன்பங்களை தாங்கக்கூடிய ஆற்றல் அதிகமாக இருக்கும்.
சனி செவ்வாய்:
இவர்களிடம் அடக்கி வைக்கப்பட்ட அதிகமான கோபம், தீவிரமான சகிப்புத்தன்மை, எதையும் திட்டமிட்டு செயல்படக்கூடிய திறன், போராடும் மனப்பான்மை இருக்கும்.
சனி புதன்:
இவர்களுக்கு எதையும் கட்டமைப்புடன் சிந்திக்க கூடிய திறன், கூர்மையான பகுத்தறிவு எதிலும் எச்சரிக்கையுடன் பேசக்கூடிய இயல்பு இருக்கும்.

சனி குரு:
இவர்களுக்கு மிகவும் முதிர்ச்சியான ஞானம், அறநெறி சார்ந்த நீதி உணர்வு, நீண்ட கால வளர்ச்சியாகவே கொடுக்கும்.
சனி சுக்கிரன்:
இவர்கள் எப்பொழுதும் நடைமுறைக்கு ஏற்ற காதல் தேர்ந்தெடுப்பார்கள். பணத்தை கையாள்வதில் விவேகம், பழமையான கலைப் பொருட்கள் மீது ஆர்வம் இருக்கும்.
சனி ராகு:
இவர்களுக்கு கடுமையான கர்ம சோதனைகள், வழக்கத்திற்கு மாறான லட்சியம் போன்றவை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் இருக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |