பல் முதல் பாதம் வரை… ஜாதகத்தில் சனி இருக்கும் இடம் சொல்லும் ஆரோக்கிய ரகசியங்கள்

By Sakthi Raj Nov 20, 2026 07:50 AM GMT
Report

ஜோதிடத்தில் சனி என்பவர் கர்ம காரகனாக இருக்கிறார். இவர் தான் அவருடைய ஆயுள், உழைப்பு, கர்ம வினை ஆகிவற்றை குறிக்க கூடியவராக இருக்கிறார்.

அப்படியாக, சனி பகவான் எந்த வீட்டில் அமர்கிறாரோ அதை வைத்து நாம் ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களுடைய உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் எந்த விதத்தில் அவர்கள் பிரச்சினையை சந்திப்பார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ள முடியும். அதைப் பற்றி பார்ப்போம்.

ஒருவருக்கு சனி மூன்றாம் வீட்டில் அமர்ந்து இருந்தால் அவர்களுக்கு உடல் பலவீனம் உடம்பு இறுக்கம், எலும்பு மூட்டு பிரச்சனை வரலாம்.

பல் முதல் பாதம் வரை… ஜாதகத்தில் சனி இருக்கும் இடம் சொல்லும் ஆரோக்கிய ரகசியங்கள் | Saturn In 12 Houses Predictions About Health

2026: டிசம்பர் 12, 18 தேதிகளில் கவனம்..சிம்ம ராசிக்கான டிசம்பர் மாத பலனும் பரிகாரமும்

2026: டிசம்பர் 12, 18 தேதிகளில் கவனம்..சிம்ம ராசிக்கான டிசம்பர் மாத பலனும் பரிகாரமும்

சனிபகவான் இரண்டாம் வீட்டில் இருக்கிறார் என்றால் பல் பிரச்சனை, பற்கள், வாய், தொண்டை பிரச்சனை வரலாம்.

சனிபகவான் மூன்றாம் வீட்டில் அமர்கின்ற பொழுது இவர்களுக்கு தோள்பட்டை வலி, கை இறுக்கம், சுவாசம், நரம்பு பிரச்சனை சந்திக்கலாம்.

நான்காம் வீடுகளில் சனி இருக்கும் பொழுது நெஞ்சு, அசௌகரியம், நுரையீரல் பிரச்சனை, மனம் கனமாக இருப்பது போன்ற பிரச்சனையை சிந்திக்கலாம்.

சனி ஐந்தாம் வீட்டில் இருக்கின்ற பொழுது வயிறு பிரச்சனை, குழந்தை பாக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்,

சனி 6-ல் இருக்கின்ற பொழுது நீண்ட நாள் ஆரோக்கிய தொந்தரவு வந்து பிறகும் மெதுவாக குணமடைய கூடிய தன்மை இருக்கும்.

பல் முதல் பாதம் வரை… ஜாதகத்தில் சனி இருக்கும் இடம் சொல்லும் ஆரோக்கிய ரகசியங்கள் | Saturn In 12 Houses Predictions About Health

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (20-11-2026)

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (20-11-2026)

சனி 7-ல் இருக்கும் பொழுது சிறுநீரகம், குழந்தை பாக்கியம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.

சனி எட்டாம் வீட்டில் இருக்கின்ற பொழுது நீண்ட நாட்களாக சந்திக்க கூடிய நோய் ஆதலால் நீண்ட நாள் கவனமாக இருப்பது அவசியமாகும்.

சனி ஒன்பதாம் வீட்டில் இருக்கின்ற பொழுது தொடை, நரம்பு பிரச்சனை வரலாம்.

சனி பத்தாம் வீட்டில் இருக்கின்ற பொழுது முழங்கால் பிரச்சனை, மூட்டு வலி வேலையால் வரக்கூடிய தொந்தரவுகள் வரலாம்.

சனி பதினோராம் வீட்டில் இருக்கின்ற பொழுது கால் ரத்தம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.

சனி பன்னிரண்டாம் வீட்டில் இருக்கின்ற பொழுது பாத பிரச்சனை, தூக்கமின்மை தனிமை போன்ற பிரச்சனை வரலாம். 

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US