லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் சனி இருந்தால் அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டுமாம்

By Sakthi Raj Sep 29, 2026 01:00 PM GMT
Report

ஜோதிடத்தில் கர்ம காரகன் என்று அழைக்கக்கூடிய சனிபகவான் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறார். இவர் தான் நீதி நேர்மை நியாயம் ஆகியவற்றிக்கு காரணியாக இருக்கிறார்.

நல்லது செய்தாலும் அதற்குரிய பலனும், கெட்டது செய்தாலும் அதற்குரிய பாடமும் கற்றுக் கொடுக்கக் கூடியவர்.

அந்த வகையில், லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் ஒருவருக்கு சனி அமைந்து இருந்தால் அவர்களுக்கு நாக்கில் சனி இருப்பது போன்ற அவர்கள் சொன்னவை எல்லாம் பலித்து விடும். ஒருவரை திட்டினாலும் பலித்து விடும்.

லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் சனி இருந்தால் அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டுமாம் | Saturn In 2Nd House In Horoscope Prediction

வீடுகளில் செல்வம் பெருக புதன்கிழமை காமாட்சி அம்மன் விளக்கு வழிபாடு செய்வது எப்படி?

வீடுகளில் செல்வம் பெருக புதன்கிழமை காமாட்சி அம்மன் விளக்கு வழிபாடு செய்வது எப்படி?

 

ஒருவரை இவன் இப்படித்தான் இந்த வழியில் தான் செல்வான் என்றால் அது நிச்சயமாக காலம் கடந்தும் நடப்பதை நாம் பார்க்க முடிகிறது. இவர்கள் பெரும்பாலும் அவ்வளவு எளிதாக யாரையும் பாராட்டி விட மாட்டார்கள்.

இவர்களுடைய பாராட்டுகளை பெறுவது மிக கடினம். ஆனால், இதுவே சனி வக்கிரத்தில் இருந்தால் நேர்மாறான பலன்களை பெறுவார்கள். இதோடு சேர்ந்து சனி இரண்டாம் இடத்தில் இருக்கின்ற பொழுது அவர்கள் எதிர்காலங்களில் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரராக கூடிய வாய்ப்புகளும் கிடைக்கிறது.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US