சனி பெயர்ச்சி: 2027 ஜூன் வரை ராஜயோகத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் யார்?
ஜோதிட சாஸ்திரத்தில் கர்ம காரகனாகவும் மிகவும் முக்கியமான கிரகமாகவும் சனி பகவான் இருக்கிறார். இவர் நீதிமானாக விளங்க கூடியவர். அந்த வகையில் அடுத்த ஆண்டு 2027 ஜூன் மாதம் வரை இவர் ஒரே ராசியில் இருக்கிறார்.
சனியின் பெயர்ச்சியானது பாதிப்பை தான் கொடுக்கும் என்றாலும் சில நேர்மறையான பலன்களையும் அவர் தருவது உண்டு. அந்த வகையில், 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை மிகப்பெரிய அளவில் நன்மைகளை அனுபவிக்க போகக் கூடிய ராசிகள் யாரென்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சாதகமான பலனை கொடுக்கப் போகிறார். இவர்களுக்கு நீண்ட நாட்கள் தடைப்பட்ட காரியம் விலகும்.
இவர்கள் அரசு வேலைக்காக படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அந்த வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. பொருளாதாரம். நினைத்தது போல் வளர்ச்சி அடையும். புதிய வீடு சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் நிம்மதியை இந்த காலகட்டம் தர போகிறது. நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு அதிலிருந்து விடுபடக்கூடிய காலம் வரப்போகிறது. திருமண வாழ்க்கையில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும்.
திருமண வரன் நினைத்தது போல் கைகூடும். கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரமும் வருமானமும் பெறுவீர்கள். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மைகளை சனி பகவான் அள்ளிக் கொடுக்கப் போகிறார். கடின உழைப்பிற்கு ஏற்ற முழு பலன் இந்த காலகட்டத்தில் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல உயர்வை அடைவீர்கள்.
தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதை போல் புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கிறது. பதவி உயர்வு அந்தஸ்து கிடைப்பதற்கான யோகம் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |