சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் எந்த ராசிகளுக்கு?
சனி பகவான் உத்தரட்டாதி நட்சத்திரத்திற்கு நாளை (ஜனவரி 20) பெயர்ச்சி அடைகின்றார். இதனால் 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெற போகின்றனர்.
சனியின் நட்சத்திர பெயர்ச்சி
சனி மிக சக்திவாய்ந்த மற்றும் கர்மத்தின் அடிப்படையில் பலன் வழங்கும் முக்கிய கிரகமாகும். நாளை (ஜனவரி 20) சனி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைவதால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
குறிப்பாக மிதுன ராசிக்காரர்களுக்கு வருமான உயர்வு, வணிக லாபம், தொழில் விரிவாக்கம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிப்பு ஏற்படும்.
வேலை தேடுபவர்கள், வேலை மாற்ற நினைப்பவர்கள் மற்றும் அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகும். இந்த பலன்களை அப்படியே பெறுபவர்கள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

கடகம்
- சனி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைவது கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமைகிறது. இந்த காலத்தில் நீண்ட நாட்களாக நீடித்த பிரச்சனைகள் தீர்வு காணும்.
- தடைபட்டு நின்ற பணிகள் மீண்டும் வேகம் பெறும். தொடங்கும் செயல்கள் வெற்றிகரமாக முடியும். பணியில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல மதிப்பும் பாராட்டும் கிடைக்கும்.
- பதவி உயர்வு பெறும் வாய்ப்பும் உள்ளது. சமூக அந்தஸ்தும் மரியாதையும் உயரும். புதிய வீடு, மனை அல்லது வாகனம் வாங்கும் யோகமும் ஏற்படும். மொத்தத்தில், சனியின் இந்த மாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.
மிதுனம்
- சனி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். இந்த காலத்தில் வருமானத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
- வணிக ஒப்பந்தங்கள் மூலம் அதிக லாபம் ஈட்டும் வாய்ப்பு வரும். தொழிலை பெருக்க நல்ல சூழ்நிலை அமையும். சனியின் இந்த மாற்றம் மிதுன ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையை உயர்த்தும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது உள்ள வேலையை மாற்ற விரும்பினாலும் அது சாத்தியமாகும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைகும்.
மகரம்
- சனி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைவது மகர ராசிக்காரர்களுக்கு சாதகமான காலமாக அமையும். இந்த காலகட்டத்தில் அவர்கள் பல அபிரிமிதமான பலன்களைப் பெறுவார்கள்.
- தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமானம் உயர்ந்து, கூடுதல் வருமானம் பெற வழிகள் கிடைக்கும். இதனால் நிதி நிலைமை சிறப்பாக மேம்படும் மற்றும் சேமிப்புகள் அதிகரிக்கும்.
- தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். முயற்சி செய்யும் அனைத்து விஷயங்களும் வெற்றி கிடைக்கும்.