சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: நிதிநிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்!
பொதுவாகவே ஜோதிட கணிப்புகளில் சனி பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கப்படுகின்றது. காரணம் சனி பனவான் நீதியின் கடவுளாக அறியப்படுகின்றார்.
ஒருவருடைய கரும வினைகளுக்கு ஏற்ப எந்தவித பாரபட்சமும் இன்றி பலன்களை வழங்குவதால் சனி பெயர்ச்சி என்றால்லே ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு பயம் ஏற்படுவதும் இயல்பு.

அந்தவகையில், தற்போது உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்து வரும் சனிகவான் மார்ச் 21 ஆம் திகதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் மூன்றாம் பாகத்திற்கு நகர்வதால், இதன் போது சனி மீன ராசியில் அஸ்தமன நிலையில் இருப்பார்.
குறித்த சனி அஸ்தமனமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக தாக்கங்களை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசியினரின் வாழ்க்கையில் உச்சகட்ட நேர்மறையான பலன்களை கொடுக்கப்போகின்றது.
அப்படி தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, நிதி நிலை என அனைத்திலும் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

மேஷம் : மேஷ ராசியின் 12-வது வீட்டில் குறித்த சனி மாற்றம் நிகழ்வதால், தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
பொருளாதார நிலையில் மார்ச் 21 ஆம் திகதிக்கு பின்னர் ஏற்றம் உண்டாகும். புதிய வருமான ஆதாரங்களுக்காக வழிகள் திறக்கும்.
நீண்ட காலமாக இந்த ராசியினரின் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். மனநிலையிலும் ஒரு புத்துணர்வு கிடைக்கும்.
சிம்மம்: சிம்ம ராசியின் 8-வது வீட்டில் குறித்த சனி பெயர்ச்சி நிகழ்வதால் இவர்களுக்கு எதிர்பாராத வகையில் பெரியளவில் பணவரவு இருக்கும்.
தொழில் வாழ்க்கையில் இருவரையில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி பணியிடத்தில் அமைதியான சூழல் உருவாகும்.
வாழ்வில் நீண்ட நாட்களாக சந்தித்துவந்த ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு : தனுசு ராசியின் 4-வது வீட்டில் இந்த சனி மாற்றம் நிகழ்வதால், இவர்களின் தொழில் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் உண்டாகும்.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
புதிய துறையில் வியாபாரத்தை ஆரம்பிக்கும் யோகம் உண்டாகும். அதனால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.