உங்க ராசி என்ன? உங்களை குறித்த ரகசியம் இதுதான்
ஒவ்வொரு ராசிகளுக்கும் மறைக்கப்பட்ட பண்புகள் உள்ளன. இந்த பண்புகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகலாம். இப்படியான மறைமுகமான பண்புகள் ஒருவரது ஆளுமையின் மிகவும் சிக்கலான மற்றும் சுவாரஸ்யமான பக்கத்தை வெளிப்படுத்தலாம்.

மேஷம் தங்களின் உணர்ச்சிகளை யாரிடமும் வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்திருப்பார்கள்.
ரிஷபம் அழகு, ஆடம்பரம், இன்பத்தை ஆழமாக போற்றுவார்கள்.
மிதுனம் மிகவும் சென்சிடிவ்வானவர்கள் மற்றும் பச்சாதாபம் கொண்டவர்கள்.
கடகம் தங்கள் அன்புக்குரியவர்களை கடுமையாக பாதுகாப்பார்கள்.
சிம்மம் அனைவரது கவனமும் தன்மீது இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
கன்னி எழுத்து முதல் கலை, இசை வரை பல்வேறு படைப்புத் துறைகளில் இயல்பாகவே திறமையானவர்கள்.
துலாம் உள்ளுணர்வுடன் வலுவான தொடர்பைக் கொண்டு ஆழ்ந்த உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள்.
விருச்சிகம் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருப்பார்கள்.
தனுசு வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தையும் நோக்கத்தையும் எப்போதும் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள்.
மகரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த போராடுவார்கள்.
கும்பம் முரண்பாடான உணர்வுகளை வெளிப்படுத்துவதால், உணர்ச்சி கொந்தளிப்புக்கு ஆளாவார்கள்.
மீனம் தங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவோஅல்லது எல்லைகளை நிர்ணயிக்கவோ போராடலாம்.