காலையில் எழுந்ததும் இதை முதலில் பார்த்தால் அதிர்ஷ்டம் போய் விடுமாம்
காலையில் தூங்கி எழுந்ததும் நாம் காணும் முதல் விடயம் நம்முடைய நாளை இன்னும் அழகாக மாற்றும்.
சில நல்ல விடயங்களை காலையில் செய்யும் போது உங்களுடைய நாள் ஆசீர்வாதமாக இருக்கும்.
அந்தவகையில், காலை எழுந்ததும் சில பொருட்களை காண்பது நமக்கு புத்துணர்வை வழங்கும் என பெரியோர் சொல்வர்.
காலையில் பார்க்கக்கூடியவை
நமது உள்ளங்கைகளில் மகாலட்சுமி வாசம் செய்வதால் காலையில் விழித்ததும் உள்ளங்கைகளை ஒரு சேர பார்ப்பது அன்றைய நாளை அதிர்ஷ்டமானதாக மாற்றும்.
காலை எழுந்ததும் மகாலட்சுமியின் படத்தை காண்பது வழக்கமாக வைத்திருந்தால் உங்களுக்கு செல்வம் பெருகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
அதேபோல், காலையில் எழுந்ததும் கணவன், மனைவி ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதும் அந்த நாளை மகிழ்ச்சியாக மாற்றும்.
தினமும் படுக்கையில் இருந்து வெறுமனே எந்திரிக்காமல் கடவுளுடைய சில மந்திரங்களை உச்சரிப்பது நல்லது.
காலையில் தீப ஒளியை பார்ப்பது உங்களுடைய நாளை மங்களகரமாக மாற்றும்.
கோயில் கோபுரம், ஆலய மணி ஓசை, பசு, கன்று குட்டி, இயற்கை காட்சிகள், இசைக்கருவிகள், மஞ்சள், குங்குமம், விபூதி ஆகியவற்றை காலையில் காண்பதால் அன்றைய நாள் நன்றாக அமையும்.
காலையில் பார்க்ககூடாதவை
கடல் அலைகள், நெருப்பு போன்றவற்றை பார்க்கவே கூடாது. இதனால் எதிர்மறை சிந்தனை வரும்.
குறிப்பாக காலையில் எழுந்ததும் சண்டை போடுவது, கோபமாக பேசுவது, எதிர்மறையான வார்த்தைகளை பேசுவது தவிர்க்கப்பட வேண்டியது.
காலையில் எழும்போது பதற்றத்துடன் படபடப்பாக இருப்பது உங்களுடைய மூளையை பாதிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |