செந்தூரம் பூசுவதற்கு பின்னால் இருக்கும் காரணம் தெரியுமா?

By Sakthi Raj Aug 25, 2024 12:30 PM GMT
Report

அனுமன் என்றாலே நாம் அவரை வணங்கிய பின் செந்தூரம் பூசுவோம்.அப்படியாக அவ்ருக்கு மட்டும் ஏன் செந்தூரம் பூசுகின்றோம் அதன் பின் இருக்கும் சுவாரசிய சம்பவம் பற்றி பார்ப்போம்.

அதாவது ராவணன் காவலில் சீதாபிராட்டி இருந்த போது, சீதாபிராட்டியைத் தேடி இலங்கை வந்தார் ஹனுமார். அங்கு மரத்தடியில் அமர்ந்து இருந்த சீதா பிராட்டியை பார்த்த ஹனுமான் முதலில் அவளது காலில் இருந்த மெட்டியை நோக்கிப் பார்த்த பின்,சீதையின் நெற்றியை பார்த்த பொழுது அதில் குங்குமத்திற்கு பதில் செந்தூரம் இருந்ததைக் கண்டார்.

உடனே ஹனுமான் அம்மா திருமணம் ஆன பெண்கள் தங்கள் திருமணம் ஆன அடையாளமாகவும் தங்கள் கணவன் ஆயுள் பலமாகவும் நெற்றியில் குங்கும் தானே வைப்பார்கள்.

செந்தூரம் பூசுவதற்கு பின்னால் இருக்கும் காரணம் தெரியுமா? | Senthooram Vaipathin Karanam

ஆனால் நீங்கள் குங்குமம் பதிலாக ஏன் செந்தூரம் உள்ளது என ஹனுமான் கேட்க, அதற்கு சீதாபிராட்டி, "மைந்தா, என் அன்பான கணவரின் நினைவுமட்டும் தான்,எங்கு எல்லாமே.அவர் நினைவுகள் மட்டும் தான் எப்போதும் என்னுடம் இருக்க வேண்டும் என நினைத்தே, செந்தூரத்தை இட்டுக் கொண்டேன்.

ஏன் என்றால் தூய்மையான செந்தூரத்தை,எத்தனை அழித்தாலும் அது முழுவதுமாக அழியாமல் அதன் கறையை விட்டு வைக்கும். அது போலத்தான் என்னிடம் இருந்து என் கணவரின் நினைவை மாற்றவே முடியாது என்பதை காட்டவே, அதை இட்டுக் கொண்டேன்.

கிருஷ்ணருக்கு வெண்ணை வைத்து படைப்பதறகான முக்கிய காரணம் தெரியுமா?'

கிருஷ்ணருக்கு வெண்ணை வைத்து படைப்பதறகான முக்கிய காரணம் தெரியுமா?'


" என்றாராம் சீதாபிராட்டி. அதைக் கேட்ட ஹனுமார் சிலிர்த்து போய், ராமரே என் நினைவில், மற்றும் நான் செய்யும் அனைத்திலும் இருக்கட்டும் என்ற மனதோடு,ராம நாமத்தை ஜபித்தபடி தனது உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டாராம்.

அதனால் தான் ஹனுமார க்கு செந்தூரம் இடுகிறோம். உண்மை பக்தியும் அன்பும் எப்பொழுதும் நம்முடன் வடுவாக நீங்காமல் நம்முடன் இருக்கும் என்பதற்கு எத்தனை அழகான பக்தியை கொண்டுள்ளார்கள் சீதையும் அனுமனும் என்பதற்கு இந்த செந்தூரம் சாட்சி.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US