உருவாகும் தசாங்க யோகம் - ராஜ வாழ்க்கையை வாழப்போகும் அந்த 3 ராசிகள் யார் தெரியுமா?
ஜோதிடத்தில் கிரகங்களுடைய மாற்றங்கள் தான் நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது. அப்படியாக குருவும் புதனும் இணைந்து தசாங்க யோகத்தை உருவாக்குகிறார்கள். இதனால் குறிப்பிட்ட சில 3 ராசிகள் நற்பலன்களை பெற போகிறார்கள்.
அதாவது ஜோதிட சாஸ்திரப்படி செப்டம்பர் 16ஆம் தேதி இரவு 8:53 மணிக்கு குருவும் புதனும் ஒருவருக்கு ஒருவர் 36 டிகிரி இடைவெளியில் சந்திக்க உள்ளார்கள். அதுவும் புதன் அதிபதியான கன்னி ராசியில் இந்த யோகம் நிகழ உள்ளது. இதனால் அதிர்ஷ்டம் பெறும் மூன்று ராசிகள் யார் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இந்த கால மிகவும் பொன்னான காலமாக அமைய போகிறது. இவர்கள் இந்த காலத்தை பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை அடையலாம். ஒரு சிலருக்கு வேலை மாற்றம் இடமாற்றம் பதவி உயர்வு சம்பளம் உயர்வு சமுதாயத்தில் நற்பெயர் போன்ற பல விஷயங்கள் இவர்களுக்கு தேடி வர போகிறது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறக்கூடிய அற்புதமான காலகட்டமாகும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இந்த காலகட்டம் அவர்கள் தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சியை கொடுக்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தில் இவர்களுக்கான மதிப்பு உயரக்கூடிய ஒரு காலம். சமுதாயத்தில் இவர்களுக்கு என்ற ஒரு தனி பெயரை எடுக்கக்கூடிய காலம் ஆகும். பொருளாதார ரீதியாக சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விட்டு விலகப் போகிறது. உயர் கல்விக்கான அனைத்து ஏற்பாடுகளும் இவர்களுக்கு சாதகமாக அமையும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இந்த காலகட்டம் அவர்கள் வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வை நோக்கிய பொன்னான காலகட்டமாகும். ஒரு சிலருக்கு குடும்பத்தில் ஏற்பட்ட மனக்குழப்பங்கள் விலகும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். சிலருக்கு ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். கேட்ட இடத்தில் இருந்து இவர்களுக்கு பண உதவிகள் கிடைக்கும். வீடு மற்றும் நிலம் தொடர்பான விஷயங்கள் இவர்களுக்கு சாதகமாக அமையப் போகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







