அஷ்டம சனி ஏழரை சனி என்ன செய்யும்? அதிலிருந்து விடுபட செய்ய வேண்டிய பரிகாரங்கள்
நவக்கிரகங்களில் நீதிமானாக இருக்கக்கூடியவர் சனி பகவான். மேலும் சனி பகவானின் தாக்கம் நமக்கு பல்வேறு வகையில் தீமைகள் விளைவித்தாலும் இறுதியில் நன்மையை அளிக்கும். அப்படியாக சனி பகவானின் இடம் மாற்றும் ஒரு சில ராசிகளுக்கு சமயங்களில் அஷ்டம சனியாகவும் ஏழரை சனியாகவும் நடக்கும். அந்த வகையில் அஷ்டம சனி என்றால் என்ன? ஏழரை சனி என்றால் என்ன? என்று பார்ப்போம்.
ஒருவருடைய ராசிக்கு எட்டாவது இடத்தில் சனி பகவான் வருகிறார் என்றால் அதைத்தான் அவர்கள் அஷ்டம சனி என்று சொல்வார்கள். இந்த காலகட்டங்களில் அவர்கள் செய்யும் காரியங்கள் அவ்வளவு எளிதாக வெற்றி பெறாது.
ஆனால் இவர்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றால் அவர்கள் வெற்றிகாணலாம். மேலும், இந்த காலகட்டங்களில் பலருக்கும் வீண் பிரச்சனைகள். தேவை இல்லாத பழிச்சொற்கள், புத்திசாலியாக இருந்தாலும் அவர்களின் அறிவை பயன்படுத்த முடியாத சூழ்நிலை இவர்களுக்கு அஷ்ட சனி காலங்களில் ஏற்படும்.
மேலும் சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை காலம் சஞ்சரிக்கிறார். ஆக அந்த இரண்டரை வருட காலம் முடிந்து அவர் நகரும் பொழுது அந்த அஷ்டமசனி சந்தித்தவர்கள் ஞானி போல் ஆகி விடுவதையும் பார்க்கலாம்.
அதேபோல் ஏழரை சனி என்பது சந்திர ராசிக்கு முன் ராசியிலும் சந்திர ராசியிலும் அதற்கு அடுத்த ராசியிலும் சனீஸ்வர பகவான் சஞ்சரிக்கும் காலம் தான் இந்த ஏழரை சனி காலமாகும். இந்த மூன்று ராசியிலும் சனிபகவான் சுமார் இரண்டரை வருடம் காலம் என்ன மொத்தம் ஏழரை ஆண்டுகள் அவர் அங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஏழரை சனி காலத்தில் முதல் பகுதியை விரைய சனி என்பார்கள். இந்த காலகட்டத்தில் பண கஷ்டம் உடல் ஆரோக்கிய குறைபாடுகள் போன்ற அனைத்தும் இவர்களுக்கு சாதகம் இல்லாத நிலையாகவே இருக்கும். இந்த காலகட்டங்களில் மனதில் அதிக அளவிலான போராட்டம் இவர்கள் சந்திப்பார்கள். அடுத்து ஜென்ம சனி என்பார்கள்.
இந்த காலகட்டத்தில் கடந்து காலங்கள் காட்டிலும் தொல்லைகள் சற்று குறைவாக இருந்தாலும் சனி பகவான் இவர்களை விட்டு விலகும் பொழுது பல நன்மையை அளிக்கிறார். மேலும் ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி காலங்களில் நாம் ஒரு சில பரிகாரங்கள் செய்தால் நமக்கு சனியின் தாக்கம் குறையும்.
அதாவது நாம் மனதார உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்தல், அவர்களிடம் அன்பாக பழகுதல் போன்ற விஷயங்களை செய்வது, சனிபகவானுக்கு மிகவும் பிடித்தமான விஷயம் ஆகும். அவ்வாறு செய்வதால் சனி மனம் குளிர்ந்து நமக்கு அருள் புரிகிறார்.
அதோடு சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்வதோடு காக்கைக்கு உணவு வைக்க வேண்டும். சனிக்கிழமைகளில் தவறாமல் ஹனுமன் வழிபாடு செய்வதும் அனுமனுக்குரிய மந்திரங்கள் சொல்வதும் சனி பகவானின் தாக்கத்தை குறைத்து நன்மைகளை அளிக்கிறது.
மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை ராகு கால வேளையில் காலபைரவரை வழிபடலாம். முடிந்தவர்கள் தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானுடைய தாக்கம் குறையும்.
கூடுதலாக சனிக்கிழமைகளில் வரக்கூடிய பிரதோஷ நாட்களைத் தவிர விடாமல் சிவ வழிபாடு செய்வதால் சனி பகவானின் உக்கிரத்தை குறைத்து நமக்கு நற்பலன்களை அருளிச்செய்கிறார். முடிந்தவர்கள் கரிநாளில் பைரவரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்தாலும் சனி பகவானுடைய தாக்கத்தை குறைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







