இன்றைய ராசி பலன் (12-02-2026)
மேஷம்:
உடல் சோர்வு உண்டாகும். மனதில் வாழ்க்கையை பற்றிய குழப்பமும் பயமும் உண்டாகும். மாலை மேல் தெளிவாக யோசித்து செயல்படுவீர்கள். நணபர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். சகோதரி வழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம்:
வீடுகளில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும் நாள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். வேலை பளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களிடம் கவனமாக பேசுங்கள்.
மிதுனம்:
வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும். இன்று சிலரின் உண்மை முகங்களை புரிந்து கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் எதிர்பார்ப்பை குறைத்து கொள்ளுங்கள்.
கடகம்:
பிள்ளைகள் வாழ்க்கையை பற்றிய கவலையும் பயமும் உண்டாகும். வேலை மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் நற்பெயர் உண்டாகும்.
சிம்மம்:
திடீர் வெளியூர் பயணம் வேலைக்காக செல்ல நேரலாம். எதையும் நிதனமாக யோசித்து பேசுங்கள். மாணவர்கள் படிப்பில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்காக நேரம் செலவு செய்ய விரும்புவீர்கள்.
கன்னி:
இன்று சுற்றி உள்ளவர்கள் மீது ஒரு வெறுப்பும் விரக்தியும் உண்டாகலாம். நம்பியவர்களின் உண்மை முகம் தெரிந்து கொள்ளுவீர்கள். மனதில் இறை சிந்தனை அதிகரிக்கும். வேலையில் முழு கவனம் செலுத்துவீர்கள்.
துலாம்:
இன்று வாழ்க்கை பற்றிய முக்கியமான முடிவு எடுக்கும் நிலை வரலாம். தாய் வழி உறவுகள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள்.
விருச்சிகம்:
உங்கள் வாழ்க்கையை பிறர் வாழ்க்கையிடம் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். அரசு வழியே உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். தந்தையிடம் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.
தனுசு:
சொந்தங்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது. சிலருக்கு வெளியூர் பயணம் மேற்கொள்ளும் நிலைமை உருவாகலாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
மகரம்:
வெளியே செல்லும் பொழுது உடைமைகளில் கவனமாகி இருங்கள். குலதெய்வ வழிபாடு செய்யவேண்டும் என்று எண்ணம் உருவாகும். கலை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு உண்டாகும்.
கும்பம்:
ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பெண்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனை வரலாம். காலை முதல் பதட்டமாக இருந்தாலும் மதியம் மேல் மனதில் அமைதி உண்டாகும் நாள்.
மீனம்:
மனதில் ஒருவகையான துணிச்சல் உண்டாகும். பிள்ளைகள் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான விஷயங்கள் செய்வீர்கள். இறைவழிபாட்டில் மனம் ஆர்வம் செலுத்தும். புதிய விஷயங்களை தேடி படிப்பீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |