அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்க போகும் செவ்வாய்- வெற்றி யாருக்கு?
9 கிரகங்களில் செவ்வாய் ஒரு மனிதனின் மன வலிமை, உடல் வலிமை வீரம், துணிச்சல் கொடுக்க கூடியவர் செவ்வாய் பகவான். அப்படியாக இப்பொழுது மிதுன ராசியில் பயணம் செய்யும் செவ்வாய், வருகின்ற ஏப்ரல் ஏப்ரல் 3 2025 கடக ராசிக்கு செல்கிறார்.
பிறகு செவ்வாய் பகவான் கடகத்தில் ஜூன் 7 வரை பயணம் செய்ய உள்ளார். இதனால் நான்கு ராசிகளுக்கு நல்ல வெற்றியையும், மன தைரியத்தையும் கொடுக்க உள்ளார். செவ்வாய் கடக ராசியின் பயணத்தால் எந்த ராசியினர் மிக பெரிய மாற்றமும் அதிர்ஷ்டமும் பெற போகிறார்கள் என்று பார்ப்போம்.
கடகம்:
செவ்வாய் கிரகத்தின் இந்த இட மாற்றம் கடக ராசிக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் பாதையை கொடுக்க போகிறது. இந்த சமயத்தில் உங்கள் பிள்ளைகள் நலனில் நல்ல அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் நல்ல முயற்சி செய்து லாபம் பெறுவீர்கள்.
சிம்மம்:
செவ்வாய் கிரகத்தின் இந்த இடமாற்றம் சிம்ம ராசிக்கு குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியை கொடுக்கும். சிலருக்கு புனித யாத்திரை செல்லும் வாய்ப்புகள் உருவாகும். உடன் பிறந்த சகோதரிகளிடம் நல்ல பிணைப்பு உருவாகும்.
கன்னி:
செவ்வாய் கிரகத்தின் இந்த இடமாற்றம் கன்னி ராசிக்கு மனதளவில் ஒரு விதமான தைரியத்தை கொடுக்கும். வேலையில் நல்ல முன்னேற்றமும், சம்பள உயர்வும் கிடைக்கும். தாய் வழியில் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்:
செவ்வாய் கிரகத்தின் இந்த இடமாற்றம் கும்ப ராசிக்கு தொழில் வாழ்க்கைக்கு நல்ல முன்னேற்றம் கொடுக்கும். உடல்நிலையில் சில உடல் உபாதைகள் சந்தித்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சமுதாயத்தில் நல்ல மதிப்பு உயரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |