செய்வாய் கிழமை நாம் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான ஆன்மீக தகவல்கள்

By Sakthi Raj Jul 02, 2024 09:30 AM GMT
Report

பொதுவாக நாம் ஏதேனும் நல்ல காரியம் செய்யவேண்டும் என்றால் நாள் தேதி எல்லாம் பார்த்து தான் செய்வோம்.

பொதுவாக திங்கள் புதன் வெள்ளி அனைத்து நல்ல காரியமும் செய்ய சிறந்த நாட்களாகவும் செவ்வாய் தினத்தில் சில முக்கிய நிகழ்வுகளை செய்வதை தவிர்ப்பது என்று இருக்கின்றோம்.

உண்மையில் செவ்வாய் கிழமைகளில் ஆன்மீக ரீதியாக என்ன செய்யலாம் என்ன செய்ய கூடாது என்று பார்ப்போம். அதாவது நவகிரகங்களுக்குள் மிகச்சிறந்தது செவ்வாய் கிரகமாகும்.

செய்வாய் கிழமை நாம் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான ஆன்மீக தகவல்கள் | Sevvai Kilamai Seiyavendiyavai Murugan Deepam

செவ்வாய் கிரகத்திற்கு மங்கள காரகன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. செவ்வாய் என்றாலே மங்கலமான நாள் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.செவ்வாய்க்கிழமையன்று எந்த ஒரு காரியத்தையும் செய்ய விரும்பாதவர்கள் வாழ்க்கையில் முழு பலனையும் அடைய முடியாது என்பது நம்பிக்கை.

கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமானுக்கு செவ்வாய் கிழமை தான் உகந்த நாளாக கருதப்படுகிறது. அந்த செவ்வாய்க்கிழமையில் தான் முருகனுக்கு உகந்த மௌன அங்காரக விரதம் ஒன்று பின்பற்றப்படுகிறது.

தீராத பிரச்சனைகளை தீர்க்கும் ராஜகோபால சுவாமி

தீராத பிரச்சனைகளை தீர்க்கும் ராஜகோபால சுவாமி


தர்ம சாஸ்திரத்தில் இதை பற்றி மிகவும் சிறப்பாக விரிவாக கூறப்பட்டுள்ளது. ஒருவர் செவ்வாய்க்கிழமையன்று மௌன விரதம் கடைபிடித்தால் யாகம் செய்த பலனை அடைய முடியும் என்று சொல்லப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை அன்று எந்த ஒரு விவாதத்திலும் ஈடுபடக்கூடாது.அவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்றால் அது அவர்களுக்கு பெரிய பிரச்சனையாகவே மாறிவிடும்.மேலும் செவ்வாய் தினத்தன்று முருகன் கோயிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வர முருகனின் பரிபூர்ண அருள் கிடைத்து வாழ்க்கையில் அனைத்து சௌபாக்கியங்களும் பெறலாம் .

செய்வாய் கிழமை நாம் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான ஆன்மீக தகவல்கள் | Sevvai Kilamai Seiyavendiyavai Murugan Deepam

மேலும் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கடன் பிரச்சனை உள்ளவர்கள் போன்றவர்கள் செவ்வாயன்று விரதம் மேற்கொண்டு முருகனை பூஜை செய்தால் தோஷம் நீங்கும். அவர்களின் கடன் சுமையும் விரைவில் குறைந்துவிடும் என்பது நம்பிக்கை.

அதேபோல் செவ்வாய்க்கிழமை அன்று மங்களகரமான பொருட்கள் வாங்குவதற்கும், மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் செய்வதற்கும் செவ்வாய்க்கிழமை ஏற்ற தினமாகும்.

இந்த தினத்தில் எந்த ஒரு சுபகாரியங்கள் மேற்கொண்டாலும் அது மிகவும் மங்களகரமானதாக அமையும். பலரும் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு இருக்கிறார்கள்.

வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்று தவிப்பது உண்டு.அவர்கள் அனைவரும் செவ்வாய் ஓரையில் சிறிது சிறிதாக கடனை திருப்பிக் கொடுத்து வர கடன் விரைவில் அடைந்து அந்தப் பிரச்சினையில் இருந்து விரைவாக வெளிவர முடியும்.

ஏதேனும் நோயினால் அவதிப்படுபவர்கள் செவ்வாய் ஓரையில் வைத்தியம் மேற்கொண்டால் விரைவிலேயே நோயிலிருந்து விடுபடுவார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US