கொடிய விஷபோதக யோகம் - சோதனை காலம் ஆரம்பமாகும் 3 ராசிகள்

By Sumathi Jan 02, 2026 02:29 PM GMT
Report

 பிப்ரவரி 23, 2026 காலை 11:57 மணிக்கு கும்ப ராசியில் நுழையும் செவ்வாய் பகவான், ஏப்ரல் 2, 2026 வரை அந்த ராசியிலேயே பயணிப்பார். ஏற்கனவே கும்ப ராசியில் பாவ கிரகமான ராகு பகவான் வசிக்கிறார். செவ்வாய்-ராகு இணைவால் விஷபோதக யோகம் உருவாகிறது.

கொடிய விஷபோதக யோகம் - சோதனை காலம் ஆரம்பமாகும் 3 ராசிகள் | Sevvai Rahu Serkkai Palangal 2026 In Tmail

இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் கஷ்டத்தை அளிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேஷம்

உங்கள் ஆசைகள் நிறைவேறாமல் போகலாம். சிறிய வேலைகளுக்கு கூட அதிக முயற்சி தேவைப்படக்கூடும். பணியிடத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இதனால் மன அழுத்தம் உருவாகும். மேஷ ராசிக்கு ஏழரை சனியும் நடைபெறுவதால் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படலாம்.  

தனுசு

ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். மன அழுத்தம், உடல் நலனில் மந்த நிலை மற்றும் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம். தொழில்களில் நஷ்டம், முதலீடுகளில் நிதி இழப்புகள் போன்றவற்றை சந்திக்க நேரிடலாம். இந்த காலகட்டத்தில் குடும்ப விஷயங்களை பொறுமையாக கையாள்வது அவசியம்.

செவ்வாய் உருவாக்கும் ருச்சக யோகம் - இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட்

செவ்வாய் உருவாக்கும் ருச்சக யோகம் - இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட்

மகரம்

நிதி இழப்புகளை சந்திக்க நேரிடும். முதலீடுகளை செய்வதற்கு முன்னர் கவனமாக இருக்க வேண்டும். உடல்நலன் குறித்த கவலைகளும் ஏற்படலாம். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். உடன் பிறந்தவர்களின் உடல்நிலையில் பின்னடைவுகள் ஏற்படலாம். தேவையற்ற பண விரயம், குடும்பத்தில் வாக்குவாதங்கள், கண் தொடர்பான உபாதைகள் ஏற்படும். ஆன்லைன் பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US