செவ்வாய் வக்கிர நிவர்த்தி 2025:எல்லோரும் வியந்து பார்க்க போகும் அந்த 3 ராசிகள் யார்
வேத ஜோதிடத்தில், மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்குகிறார்.இவர் ராசியையும் நட்சத்திரத்தையும் மாற்றுவதோடு, செவ்வாய் வக்ரம் மற்றும் நேர்கதியில் பயணிக்கிறது. இது 12 ராசிகளின் வீரம், வலிமை, தைரியம் மற்றும் சக்தி மீது நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.
அப்படியாக பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் கிரகம் நேர்கதியில் பயணம் செய்கிறார்.இதனால் ஒரு குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு மிக சிறப்பான பலன்கள் காத்திருக்கிறது.செவ்வாய் கிரகம் டிசம்பர் 7, 2024 அன்று காலை 5:01 மணிக்கு வக்ர கதியில் பயணிக்கத் தொடங்கியது. செவ்வாய் கிரகம் பிப்ரவரி 24, 2025 அன்று காலை 7:27 மணிக்கு நேர்கதியில் பயணிக்கத் தொடங்கும்.
மேஷம்:
பிப்ரவரி மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிக சிறப்பான பலன் காத்திருக்கிறது.இவர்கள் தொழில் ரீதியாக நிறைய வளர்ச்சிகளை சந்திப்பார்கள்.சுயதொழில் தொடங்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம்.காதல் வாழ்க்கை நல்ல விதமாக அமையும்.கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உருவாகும்.
துலாம்:
துலாம் ராசிக்கு செவ்வாய் நேர்கதி 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். சிலருக்கு நீண்ட நாள் உடல் உபாதைகள் இருந்தால் அது முற்றிலுமாக .சரி ஆகும்.மாணவர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செவ்வாய் கிரகம் சாதகமான விளைவுகளை ஏற்படுத்த போகிறது.சிலர் அவர்கள் உயர் அதிகாரியின் பாராட்டுதலை பெறுவீர்கள்.தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தோசம் உண்டாகும்.சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவு செய்வீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |