பங்குனி மாதத்தில் வீடு குடி புகக்கூடாதா? ஏன்?
பொதுவாக பங்குனி மாதத்தில் புதுமனை புகுவிழா மட்டுமல்ல வாடகை வீட்டுக்கு கூட புதிதாக குடியேறக்கூடாது என கூறுவதுண்டு.
இதுமட்டுமல்லாது அடிக்கல் நாட்டுதல், பூமிபூஜை, கிணறு வெட்டுதல் இடங்களை வாங்குவது, விற்பது, அக்ரிமெண்ட் போடுவது போன்ற எந்தஒரு நிகழ்ச்சியும் செய்யக்கூடாது என்று காலம் காலமாக சொல்கிறார்களே எது ஏன் என்று தெரியுமா?
இந்த பதிவில் அதற்கான காரணங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
வீடு, நிலம், பூமி எல்லாமே ஒரு மனிதன் நல்லபடியாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்காகத்தான் அவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து தன் வருமானத்தை சேமித்து வாங்குகிறான், தன கனவை அடைய நினைக்கிறான்.
அதை சரியான நேரத்தில் செய்தால் தானே குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும், நம் சந்ததியும் நன்றாக இருக்கும்.
சரி காரணத்திற்கு வருவோம், ஒரு வீடு என்று எடுத்துக்கொண்டோம் என்றால் கதவு, ஜன்னல் எப்படி முக்கியமோ அந்த அளவிற்கு வாஸ்து முக்கியம் பெறுகிறது.
நான்கு திசைகளில் வீடுகள் அமைந்தாலும் அதற்குள் நான்கு மூலைகளை சரியாக வைக்கவில்லை என்றால் வாஸ்து தோஷம் ஏற்பட்டு அந்த வீட்டிலே வாழ முடியாமல் போய்விடுகிறது அல்லவா?
அப்படி முக்கியம் பெரும் வாஸ்துவிற்கு அதிபதியாக திகழும் வாஸ்து பகவான் நித்திரையில் இருக்கும் மாதம்தான் பங்குனி மாதம்.
இந்த பங்குனி மாதத்தில் வாஸ்து பகவான் நித்திரையை கலைக்கும் விதமாக அமைந்துவிடுகிறது.
அதனால் மிகப்பெரிய வாஸ்து தோஷம் ஏற்பட்டு அந்த மனையின் வளர்ச்சியை கெடுத்துவிடுகிறது.
எனவே முடிந்தவரை பங்குனி மாதத்தை தவிர்த்து அடுத்து வரும் 2024 ஏப்ரல் - 23ம் தேதி செவ்வாய் கிழமை சித்திரை 10ம் நாள் மிக அருமையான வாஸ்து நாள் வருகிறது.
அந்த நாளில் வாஸ்து பகவான் நித்திரை களைத்து நீராடி, புத்தாடையுடுத்தி, உண்டு, தாம்பூலம் தரித்து மனமகிழ்வோடு இருந்து வாழ்த்துகிறார்.
அந்த நல்ல நாளில் புதுமனைபுகு விழாவையும், பூமி பூஜையையும் செய்து சிறப்பாக வாழுங்கள்.