உருவான ஷ்ராவண மாதம்.., எச்சரிக்கையாக இருக்கவேண்டிய 3 ராசிகள்
By Yashini
சவான் மாதம் என்று சொல்லக்கூடிய ஷ்ராவண மாதம் சிவனுக்கு உகந்த மாதமாகவும் புனிதமாதமாகவும் கருதப்படுகிறது.
இந்த குறிப்பிட்ட மாதத்தில் செய்யப்படும் பூஜைகள் மிகப்பெரிய பலனை தருவதாகவும் கூறப்படுகிறது.
ஷ்ராவண மாதம் ஆகஸ்ட் 5ஆம் திகதி தொடங்கி செப்டம்பர் 2ஆம் திகதி முடிவடைகிறது.
இந்நிலையில் இந்த மாதம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு பிரச்சனைகளை கொடுக்கும்.
துலாம்
- பொருளாதார ரீதியாக சில பிரச்சனைகள் வந்து செல்லும்.
- புதிய வாய்ப்புகள் அடிக்கடி வரும்.
- தொழிலில் சிறந்து விளங்குவீர்கள்.
- இருந்தாலும் கவனமாக இருக்ககூடிய காலக்கட்டமாக இந்த மாதம் கருதப்படுகிறது.
- இது போன்று பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க சிவனுக்கு வெள்ளை பூக்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- மேலும் ஏழை மக்களுக்கு தானம் செய்வதன் மூலம் சிவனின் அருளை பெறலாம்.
விருச்சிகம்
- சில சில விபத்துக்கள் நேர வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- தொழில் ரீதியாக சிறந்த பலனை அடைவீர்கள்.
- ஏதேனும் பிரச்சனைகளை சந்திப்பது போன்று இருந்தால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
- பார்வதி தேவிக்கு சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
தனுசு
- வயிறு அல்லது அது தொடர்பான பிரச்சனைகளை வந்து செல்லலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
- மேலும் உயர் ரத்த அழுத்த நோயும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
- அதனால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது மிகவும் நல்லதாகும்.
- தொழில் ரீதியாக நீங்கள் நல்ல முன்னேற்றத்தையே அடைவீர்கள். அது பெருமையடையவே செய்யும்.
- மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |