தங்கத்தை பிரசாதமாக வழங்கும் அற்புத கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?
இறைவழிபாடு என்பது நம்முடைய ஆன்மாவை மேம்படுத்தும் ஒரு அற்புத விஷயம் ஆகும். அப்படியாக, நாம் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வரும் பொழுது நிச்சயம் கோயில்களில் பக்தர்களுக்கு திருநீறு, குங்குமம், பூ, பழம், போன்றவை பிரசாதமாக வழங்குவார்கள்.
ஆனால், இந்தியாவில் வித்யாசமாக ஒரு கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக தங்கம் வழங்குகிறார்கள். இந்த கோயில் எங்கு இருக்கிறது என்று பார்ப்போம்.
இந்த கோயில் மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் என்னும் பகுதியில் அமைந்து உள்ளது. இங்கு தான் புகழ்பெற்ற மஹாலக்ஷ்மி ஆலயம் அமைந்து இருக்கிறது. இங்கு சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளியை பிரசாதமாக வழங்குகிறார்கள்.
இந்த நிகழ்வானது ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று நடைப்பெறுகிறது. இவ்வளவு பெருமை வாய்ந்த ரத்லம் என்றழைக்கப்படும் ரத்னபுரி நகரம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் மால்வாப் பகுதியில் வடமேற்குப் திசையில் அமைந்திருக்கிறது.
இந்த கோயிலின் முக்கிய நோக்கமே ஏழை எளியவர்களின் வறுமையை அகற்றுவதற்காகவே ஆகும். மேலும், இந்த ஆலயத்தில் யாரும் காணிக்கையாக பணம் செலுத்துவதில்லை.
அதற்கு பதிலாக நேர்த்தி கடனாக தங்களால் இயன்ற அளவுக்கு தங்கம் அல்லது வெள்ளியை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் தங்கம் மற்றும் வெள்ளி காணிக்கைகள் கோயிலில் மலை போல் குவித்து வைக்கப்பட்டு இருக்கும். பொதுவாக அனைத்து கோவில்களிலும் சேரும் பணம், தங்கம், வெள்ளி போன்றவற்றை கோவில் திருப்பணிக்காக பயன்படுத்துவார்கள்.
ஆனால், இந்த ஆலயத்தில் மட்டும் தான் காணிக்கையாக கிடைத்த தங்கம் மற்றும் வெள்ளியை, தீபாவளித் திருநாள் அன்று, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள்.
மேலும், இங்கு வழங்கும் பிரசாதத்தை இறைவனே தங்களுக்கு பிரசாதமாக வழங்குவதாக பக்தர்கள் கருதுகின்றனர். அதனால் கோயிலில் வாங்கும் பிரசாதத்தை யாரும் விற்பனை செய்வது கிடையாது என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |