உங்களுக்கு இறைவனின் பரிபூர்ண அருள் இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன?

By Sakthi Raj Sep 30, 2026 11:17 AM GMT
Report

இந்த உலகத்தில் பலரும் இறைவனுடைய அருளை பெறுவதற்கு பல வழிபாடுகளிலும் சடங்குகளிலும் கலந்து கொள்வது உண்டு. ஆனால் உண்மையில் இறைவனை மனதார உணரும் போது தான் அந்த நபருக்குள் ஆழமான மாற்றங்கள் நடக்கிறது. அந்த மாற்றம் அந்த நபரின் உடைய வாழ்க்கையிலும் எண்ணங்களிலும் பிரதிபலிக்கிறது.

மேலும், இறைவனை நாம் நெருக்கமாக உணர்கின்ற பொழுது எப்பொழுதும் இறை சிந்தனையில் நாம் இருக்கின்றோம். அந்த வகையில், இறைவன் உங்களுடன் எப்பொழுதும் இருக்கிறார் என்பதை உணர்த்தக்கூடிய சில அறிகுறிகளை பார்க்கலாம்.

உங்களுக்கு இறைவனின் பரிபூர்ண அருள் இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன? | Sign You Have Divine Presence In Life

பூஜை அறையில் முக்கியமாக இருக்க வேண்டிய 17 பொருட்கள் என்ன தெரியுமா?

பூஜை அறையில் முக்கியமாக இருக்க வேண்டிய 17 பொருட்கள் என்ன தெரியுமா?

ஒருவர் தீர்க்கமான இறை சிந்தனை, இறைவனுடைய அருள் பெற்று இருந்தால் தெரிந்தவர்கள் மீதும் தெரியாதவர்கள் மீதும் அன்பும் கருணையும் கொண்டு இருப்பார்கள். எவர் ஒருவர் தீங்கு செய்தாலும் அவர்களை முதலில் மன்னிக்கக் கூடிய பக்குவமே அவர்களுக்கு கிடைக்கிறது. மேலும், இவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் சமநிலையோடு இருக்கிறார்கள்.

இறை நாமத்தை எப்பொழுதும் பாராயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஏதேனும் பிரச்சனை என்றால் இவர்கள் உடனடியாக இறைவனை தேடி தான் ஆறுதல் பெற்றுக் கொள்வார்கள். இவர்களுக்கு எப்பொழுதும் உலகியல் வாழ்க்கையை விட ஆன்மீகத்திலேயே அதிக ஈடுபாடு இருக்கும். இறை அருள் இருப்பவர்கள் எப்பொழுது மற்றவர்களுடைய குறைகளிலே மட்டும் கவனம் செலுத்துபவர்கள் அல்ல.

உங்களுக்கு இறைவனின் பரிபூர்ண அருள் இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன? | Sign You Have Divine Presence In Life

பகவத் கீதை: உறவுகள் நமக்குக் கற்றுத்தரும் முக்கியமான 3 பாடங்கள் என்ன?.

பகவத் கீதை: உறவுகள் நமக்குக் கற்றுத்தரும் முக்கியமான 3 பாடங்கள் என்ன?.

ஒருவருடைய நல்ல பண்புகளை இவர்கள் உயர்த்தி பிடித்துக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு சிலர் உலகியல் வாழ்க்கையிலிருந்து சற்று விலகி தனிமையிலும் இறை சிந்தனையிலும் அமைதி காண்பதற்காக இருக்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கையை இறைபணியில் ஈடுபடுத்தி அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ள நினைக்கிறார்கள்.

அவர்களுடைய நலனில் அக்கறை செலுத்துவதோடு சேர்ந்து பிறருடைய நலனிலும் அக்கறை செலுத்துகிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இன்றி பழகக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இறைவனைப்பற்றியே பேசுவதற்கும் இறைவனுடைய கருத்துக்களை பகிர்வதலும் இவர்கள் மகிழ்ச்சியை அடைகிறார்கள்.

பிற விஷயங்களை விடவும் இறை சிந்தனை இவர்களுக்கு அதிக ஈர்ப்பை பெற்றுக் கொடுக்கிறது. இவ்வாறான எண்ணங்கள் சாதாரணமாக வருவதில்லை. ஒருவர் இறைவனை உணர்வதோடு சேர்ந்து இறை அருள் இருப்பதால் மட்டுமே இத்தகைய நிலையான சிந்தனையை பெறுகிறார்கள். அந்த சிந்தனையே இவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் துணையாக நின்று காக்கிறது  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US