விநாயகப் பெருமானின் சிறப்புப் பூஜைகளுக்கு உகந்த நாளாக இந்த நாள் பார்க்கப்படுகின்றது.
இந்து மதப்படி பௌர்ணமி அன்று அல்லது கிருஷ்ண பக்ஷத்தின் நான்காவது நாள் இந்த விரதம் கொண்டாடப்படுகிறது.
குடும்ப நன்மைக்காக பெண்கள் இருக்கும் விரதங்களில் ஒன்றாக சங்கடஹர சதுர்த்தியை பார்க்கிறார்கள்.
சதுர்த்தி விரதம் என்றால் என்ன?
சந்திரனின் இயக்கத்தின்படி கணிக்கப்படுவதை “ திதி சதுர்த்தி ” என்பார்கள். அமாவாசை மற்றும் பெளர்ணமி வந்து அடுத்து நன்காவது நான் இந்த சதுர்த்தி திதி நாளாகும்.
“சதுர்” என்பது வடமொழியில் இருந்து வந்த சொல். இது நான்கு என்பதை குறிக்கும். மாதாந்தம் 15 நாட்களுக்கு ஒருமுறை சதுர்த்தி திதி வருகிறது.
சதுர்த்தி விரதம் கடைபிடிக்கும் முறை?
விநாயகப் பெருமானின் முழு அருளை பெற்றுக் கொள்வதற்காகவே இந்த விரதத்தை பக்தர்கள் கடைபிடிக்கிறார்கள்.
தெய்வங்களில் மிக எளிமையான தெய்வமாக பார்க்கப்படும் விநாயகரை சதுர்த்தியன்று காலையில் சுத்தமான முறையில் குளித்து விட்டு கோயிலுக்கு சென்று 11 முறை வலம் வர வேண்டும்.
கோவிலுக்கு செல்லும் போது அருகம்புல், வெள்ளெருக்கு ஆகியவற்றால் மாலைக்கட்டிக் கொண்டு செல்லாம். சிலர் நாள் முழுவதும் உபவாசம் இருந்து தங்களுக்கு தேவையானவற்றை வேண்டிக் கொள்வார்கள்.
விரதம் இருந்தால் என்ன பலன்?
சதுர்த்தி நாட்களில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வீட்டிலுள்ள குழப்பங்கள் நீங்கும்.
கிரக தோஷங்கள் உள்ளவர்கள் இதுபோன்ற விரதங்களை கடைபிடித்தால் தோஷங்கள் அகன்று போக வாய்ப்பு இருக்கிறது.
சகல விதமான சங்கடங்கள் நீங்கி செளபாக்கியங்களுடன் வாழலாம்.
நீண்ட நாட்களாக நடந்து வரும் காரிய தடை நீங்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |