வீட்டில் பல்லி இறந்து கிடக்கிறதா? அப்போ கவனமாக இருங்கள்
நம்முடைய வாஸ்து சாஸ்திரத்தில் போதுமான வரை நம் வாழ்க்கை தொடர்பான விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும். அப்படியாக, இந்த உலகத்தில் நல்லது என்று ஒன்று இருந்தால் அதற்கு எதிராக தீய செயல்களும் இருக்கும்.
அதே போல் தான் வீடுகளில் நேர்மறை சக்திகள் இருந்தால் அதே போல் எதிர்மறை சக்திகளும் இருக்கும். அந்த வகையில் வீடுகளில் தீய சக்திகள் இருக்கிறது என்பதை அறிவுறுத்தும் அறிகுறிகள் பற்றி பார்ப்போம்.
பொதுவாக நம் வீடுகளில் பல்லி நடமாட்டம் அதிகம் இருக்கும். அந்த பல்லியை நம் வீட்டின் ஜோதிடர்கள் என்றே சொல்லலாம். நாம் கவனித்து இருந்தால், நம் வீட்டில் ஏதேனும் முக்கியமான நிகழ்வை பற்றி பேசும் பொழுது பல்லி சத்தம் இடுவதை கேட்டு இருப்போம்.
அந்த பல்லியின் சத்தம் வைத்து நாம் பேசிய விஷயம் நல்லபடியாக முடியுமா? முடியாதா என்று கணித்து விடலாம். இவ்வளவு சக்தி வாய்ந்த பல்லி வீடுகளில் அடிக்கடி இறந்து போகிறது என்றால் அந்த வீட்டில் அதிகப்படியான எதிர்மறை ஆற்றல் சூழ்ந்து இருக்கிறது என்று அர்த்தம்.
அந்த வீடு பில்லி சூனியத்தால் பாதிக்க பட்டு இருக்கலாம். அதே போல் வீடுகளில் தீய சக்திகள் இருந்தால் பெண்கள் எப்பொழுதும் பதட்டமாகவே காணப்படுவார்கள். கையாளும் பொருட்கள் அடிக்கடி கீழே விழுந்து உடைவதை பார்க்க முடியும்.
இவ்வாறு இருந்தால் வீடுகளில் ஏதேனும் அசுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளதாக உணர்த்துகிறது. ஆக இந்த நேரங்களில் மனம் பதட்டம் அடையாமல் வீடுகளில் காலை மாலை எப்பொழுதும் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்வதும், வீடுகளை எப்பொழுதும் வெளிச்சமாக வைப்பது உதவியாக இருக்கும்.
இரவுகளில் கட்டாயம் வாசலில் வீட்டில் உள்ள நபர்களுக்கு சூடம் ஏற்றி சுற்றி வைப்பது என்பது நமக்கு ஏற்படும் பாதிப்பை முற்றிலுமாக குறைக்க உதவும். மேலும், இவர்கள் பிள்ளையார் கோயிலுக்கு சென்று தேங்காய் உடைத்து வழிபாடு செய்வதும் இவர்களுக்கு சிறந்த நிவாரணம் கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |